News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

நீட், யூஜி தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்குக் அனுப்பியுள்ளார். இது, கரப்பான் பூச்சி அமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி.

குறுகிய காலத்தில் கரப்பான் பூச்சி கட்சி இந்த வெற்றி பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யை கட்ந்த மே 16ம் தேதி அமெரிக்காவில் வசித்துவந்த இந்தியரான அபிஜித் தீப்கே தொடங்கினார்.

நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிஜேபி கையில் எடுத்தது. ஜந்தர் மந்தரில் ஜூன் 6 முதல் தனது இளைஞர் பட்டாளத்துடன் போராட்டத்தை தொடங்கினார் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது கரப்பான் பூச்சிகள் ஒன்றாக சேர்ந்தால்?… என அபிஜித் தீப்கே அன்று எழுப்பிய ஒற்றைக் கேள்வியால் இன்று மத்திய அமைச்சரின் பதவி பறிபோயுள்ளது.

ஒரு வருட காலம் டெல்லியில் விவசாயிகள் போராடியதற்குப் பிறகுதான் ஒன்றிய பாஜக ஆட்சி இறங்கி வந்தது; விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது. இப்போது ஒரு மாதம் டெல்லியில் இளம் தலைமுறை நடத்திய போராட்டத்திலேயே ஒன்றிய ஆட்சி இறங்கி வந்து சமரசம் பேசுகிறத.; இது இளைய தலைமுறையின் போராட்ட சக்திக்கு கிடைத்த வெற்றி.

இந்த ராஜினாமாவால் எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை. எனவே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டம் விலக்கப்படும் என்கிறார்கள்.

நீட் மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படுவது மட்டுமே நிரந்தர தீர்வு. இதை கரப்பான் பூச்சிகள் சாதிக்குமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link