News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

குதிரைப் பேர விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்ற் நீதிமன்றத்தில் ஆஜரானார். மறு உத்தரவு வரும் வரை, அவர் தினமும் காலையும் மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி இன்று ஆஜரானவரிடம், ‘போலீஸ் மிரட்டினார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘’பின்னர் பேசுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். முழுமையாக ஜாமீன் கிடைத்ததும் கச்சேரி இருக்கும் என்றே தெரிகிறது.

தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ், தியாகராஜன், நரேஷ் உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 8 அன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதோடு 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் சரண் அடைந்து ரூ.25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்து முன்ஜாமீன் பெறலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தனது வழக்கறிஞர் பரணிக்குமாருடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று காலை சரண் அடைந்து ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார். ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடு்த்து இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி வாய் திறந்து பேசுகையில் எக்கச்சக்க விஷயம் வெளியே வரும் என்று நம்பலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link