News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட விஜய் அமைச்சரவை இதுவரை எல்லாத எக்கச்சக்க மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

சென்னைக்கு மரியாதை

சென்னை மாவட்டத்திற்கு மட்டும் 6 அமைச்சர்களும் இலாகா இல்லாத அமைச்சர் அந்தஸ்தில் இருவரும் உள்ளனர்.  1. விஜய் 2. ஆனந்த் 3. ஆதவ் அர்ஜுனா 4. ராஜ்மோகன் 5. மரியா வில்சன் 6. குமார் 7. ஜே சி டி பிரபாகர் – சபாநாயகர் 8. சபரிநாதன் – அரசு கொறடா.

பெண்ணுக்கு மரியாதை

தமிழ்நாடு அமைச்சரவையில் 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 1) கீர்த்தனா – தொழில்துறை 2) கமலி- 3) விஜயலட்சுமி – இந்து அறநிலையத்துறை 4) ஜெகதீஸ்வரி

பட்டியலினத்திற்கு மரியாதை

தமிழக அமைச்சரவையில் ஐந்து பறையர்கள் இடம் பெற்றுள்ளனர். 1. எழும்பூர் ராஜ்மோகன். 2. அவிநாசி எஸ்.கமலி, அரக்கோணம் வி.காந்திராஜ், மேலூர் விஸ்வநாதன் (காங்கிரஸ்), ஸ்ரீபெரும்புதூர் கே.தென்னரசு ஆகிய பேர் தவெக ஆட்சியில் அமைச்சர்களாக ஆகிறார்கள்.

அதேபோல் ராசிபுரம் லோகேஷ் தமிழ்செல்வன் (அருந்ததியர், ஒட்டப்பிடாரம் மதன்ராஜ் (தேவந்திர குலவேளாளர்) ஆகியோருக்கும் அமைச்சர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஆக மொத்தம் 7 பட்டியலினத்தவர் அமைச்சர்களாக ஆகிறார்கள்.

காஞ்சிக்கு ரெண்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பேருக்கு அமைச்சர் பதவி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வீ.இரஞ்சித் குமார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோருக்கு வாய்ப்பு. 15 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

19 மாவட்டங்களுக்கு நோ

தமிழக அமைச்சரவையில் நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை. தவெக வெற்றி பெறாத குமரிக்கு மட்டும் காங்கிரசிற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

சபாஷ் விஜய்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link