News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விஜய் அமைச்சரவைக்கு ஆதரவு கொடுத்த 25 பேரையும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதிமுகவில் இருந்த நான்கு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பஞ்சாயத்து எழுந்துள்ளது.

இன்று நடைபெற்ற விஜய் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலில் வந்தே மாதரம் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் பதவியேற்பு விழா நடந்தபோது அடுத்த முறை நாங்கள் சரி செய்து விடுவோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆதரவு ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்டால் இது தமிழக அரசு நிகழ்ச்சியல்ல. கவர்னர் அலுவலக நிகழ்ச்சி என்று கண்டுகொள்ளாமல் போவதாகச் சொல்கிறார்கள்.

அதேநேரம், அதிமுகவினர் 25 பேரில் யாருக்கும் விஜய் பதவி கொடுக்கவில்லை. இந்த விவகாரம் அதிமுகவினரை குஷியாக்கியுள்ளது. அதேநேரம், அதிமுகவில் இருந்து கட்சி தாவிய நான்கு பேர் அமைச்சராகி உள்ளனர்.

அதாவது, செங்கோட்டையன், லோகேஷ், ஆர்.வி. ரஞ்சித் குமார், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்தான் லோகேஷ் தமிழ்செல்வன். தந்தைக்கு சீட் கொடுக்க மறுத்தது அதிமுக, அதனால் மகனுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கி, தற்போது அமைச்சர் வாய்ப்பும் தந்துள்ளார் முதல்வர் விஜய்.

தவெக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தவெக-வின் கூட்டணி அமைச்சரவையில் எப்படியாவது நுழைந்து, மீண்டும் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று கனவு கண்டனர். இன்று நடந்துள்ள அமைச்சரவை விரிவாக்கம், இவர்களின் பேராசைக்கு விழுந்த மரண அடியாக மாறியுள்ளது!

இப்போது இவர்கள் முன் உள்ள கேள்வி இதுதான். தவெக-வில் அதிகாரபூர்வமாக இணைந்து, ஜூனியர் தலைவர்களுக்கு பின்னால் கைகட்டி நிற்கப்போகிறார்களா அல்லது மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சம் அடையப் போகிறார்களா என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link