News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

அண்ணாமலை புதிய இயக்கம் அறிவித்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் உறுப்பினராகப் பதிவு செய்தார்கள். அடுத்த 10 மணி நேரத்தில் இது 1 மில்லியனாக மாறியிருக்கிறது. விஜய் கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பதிவு செய்ததை, இது தாண்டும் என்று சொல்லப்படுகிறது.

திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்திக்காக யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு விஜய் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் இனி அண்ணாமலைக்கு ஓட்டுப் போடுவார்கள். அதனால்,  விஜய் தனது ஓட்டு வங்கியில், பெரும் பங்கை அண்ணாமலையிடம் இழந்துவிடுவார் என்கிறார்கள். அதேபோல், அவர் திராவிடச் சிந்தனைகளுடன் வருவதால் திராவிடக் கட்சிகளின் வாக்குகளையும் வாங்குவார் என்கிறார்கள்.

அண்ணாமலை புதிய கட்சிக்கு சி திருமாவளவன், துரை வைகோ வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் மட்டும் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

அவரது அறிக்கையில், ‘’ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான். பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை’’ என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

அதேபோல் அண்ணாமலையின் 1 மில்லியன் கணக்கும் சீட்டிங் என்று அவரது ஆதரவாளர்கள் சிலர் சொல்கிறார்கள். இதுகுறித்து பேசுபவர்கள், ‘’அண்ணாமலையை நம்பி, புதிய அரசியலையும் நேர்மையான மாற்றத்தையும் வழங்குவார் என்று எதிர்பார்த்து ஃபயர் விட்ட பலரில் ஒருவன் நான். ஆனால் அவரது ஊழல் கணக்கு, பொய் வேடத்தில் ஏமாந்துவிட்டேன். இந்த 1 மில்லியன் என்ற எண் எப்படி எட்டப்பட்டது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி ஒரு ஏமாற்று வேலையைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது  பத்து கோடியாக ஆனாலும், இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. மக்களே ஏமாந்துவிடாதீர்கள். ஆதார் வெரிஃபிகேஷன் செய்யச் சொன்னால் உண்மையான நம்பர் தெரியவரும்’’ என்கிறார்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link