Share via:
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை ராஜினாமா
செய்த கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லி தலைமை அறிவித்த பிறகு, அண்ணாமலை புதிய இயக்கம் பற்றிய
அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜகவின் இளம் தலைவர்கள் பலர் பதவி
விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
சமீபத்தில் டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசியத் தலைவர் நிதின்
நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். கட்சியின், அடிப்படை உறுப்பினர்
பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில்
உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து இன்று மதியம் அண்ணாமலை சமூக ஊடகம் மூலம் பொதுமக்களிடம்
உரையாற்றினார். அப்போது அவர், ’’இன்று முதல் புதிய பாதை, புதிய இயக்கம். சூப்பர்ஸ்டார்
ரஜினி 2020ம் ஆண்டில் என்னை அவரது கட்சியில் சேர அழைத்தார். நான் ரஜினியின் அழைப்பை
ஏற்காமல் பாஜகவில் இணைந்தேன்.
எதையும் சொல்விட்டு விலகுவதே தமிழர் பண்பு. தமிழ் பண்பாட்டை ஒருபோதும்
நான் விட்டு கொடுத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து
வந்தேன். பாஜகவில் இருந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத் தந்தது இல்லை.
தமிழ்நாட்டின் அடையாளத்தோடு பாஜக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
பாஜக தனித்து நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.
தனித்து நின்றால் தான் நமக்கு சாதகம், பாதகம் என்ன என தெரியவரும். சின்ன சின்ன பிரச்சினைகளை
எடுத்துச்சென்று மேலிடத்துக்கும் நாம் பிரச்சினையாக இருக்க கூடாது என 18மாதங்களாக நான்
தனி இயக்கம் என்ற பாதையில் பயணிக்க தயாராகிவிட்டேன்.
நாம் தொடங்க இருக்கும் கட்சி, வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும்.
கட்சியில் பலரை தலைவர்களாக உருவாக்க வேண்டும். இதுதான் என் முதல் பணி. அரசியலில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
நிரந்தர எம்.பி, நிரந்தர எம்.எல்.ஏ என்ற முறை இருக்காது. நாம் யாருக்கும் போட்டி கிடையாது.
கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் நிதானம். வருகிறவர்கள் இதை கடைப்பிடிக்க
வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இயக்கத்தை வலுப்படுத்தி, அரசியலாக மாற்றுவோம்.
வீ த லீடர் என்ற இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிடுஙஆனந்தமாக
அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும்’’ என்று அறிவிப்பு
வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை அறிவிப்பை அடுத்து தமிழக பாஜகவில் இருந்து ஏகப்பட்ட தலைவர்கள்
பதவி விலகி அவரது இயக்கத்தில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’அண்ணாமலை பதவி
விலகியதால் பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும்
கட்சி ஆரம்பிக்கலாம்..’’ என்று கூறியிருக்கிறார்.
விஜய்க்குப் போட்டியாக புதிய கட்சி உதயமாகிறது.
