Share via:
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், வேலுமணி தரப்பு வாக்களித்த
நிலையில், பிளவு உறுதிப்பட்டது. இதையடுத்து நியூஸ் ஜெ, நமது அம்மா பத்திரிகையும் எடப்பாடி
பழனிசாமி கையை விட்டு போய்விட்டது.
இந்த நிலையில் இன்று அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு என்று, ‘போர்வாள்’
நாளிதழை இபிஎஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது, எஸ்.டி.சோமசுந்தரம் முன்பு நடத்திவந்த
இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் அதிமுக மாவட்ட
செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்ட
22 எம்எல்ஏக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 25 மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்களுக்கு பதில் நியமிக்கப்பட்ட
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்பட மொத்தம் 80 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
.
இந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள 25 எம்எல்ஏக்கள்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க கட்சி தலைமை
அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எடப்பாடி மாவட்ட செயலாளர்களிடம் உறுதி அளித்தார்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் தங்களின் முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும்
தொடர்ந்து வழங்குவதாக கையெழுத்திட்டு உறுதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்களில்
முதன்மையானவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைய கூட்டத்தில் கலந்து
கொள்ளவில்லை. அதேநேரம், அவர் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆகவே, ஜெயக்குமார் இன்னமும் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு அண்ணா திமுக பஞ்சாயத்துக்கள்
முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.