News

Follow Us

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (நவ.30) காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன்ராஜ், நடிகரும் இயக்குனருமான யூகிசேது, இயக்குனர் பக்கிரிசாமி, ஜெகன் விஜய், கிருபாகர், சந்திரமோகன், பி.எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த முறை இத்திரைப்பட விழாவில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களுடன் சேர்த்து பல தமிழ்ப்படங்களின் பெயர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவணகோட்டம், சாயானவம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட்வி3 உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link