News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரனை முதல்வர் விஜய் அமரவைத்த நேரத்தில், இவர் எப்படி அவையை சமாளிப்பார் என்று குரல்கள் எழுந்தன. ஆனால், யார் தவறு செய்தாலும் திருத்துவதிலும், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பதிலும் விஜய் அரசுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஜே.சி.டி.பிரபாகரன்.

இன்று அவையில், பாஜக உறுப்பினரின் குரல் ஒலிக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில், ‘அப்படி எல்லாம் சொல்லக்கூடாது’ என்று சொல்லி அந்த பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கினார் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்.

ஒரு முன்னாள் திமுக அமைச்சர், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 5 வருடமும் டென்ஷனாகவே இருப்போம். நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கிறீர்கள்”- என்று தவெகவை சுட்டிக் காட்டிப் பேசினார். அதற்கு பதிலளித்துப் பேசிய சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், “பொழுதுவிடிந்தால் இ.டி. வருமா? சி.பி.ஐ. வருமா?- என்று இருந்தால் டென்சன் இருக்கதானே செய்யும்?” என்று கிண்டலடிக்கவே திமுக தரப்பில் பெரும் கூச்சல் எழுந்தது.

உடனே சூலூர் எம்.எல்.ஏ. இது எனது கன்னிப்பேச்சு என்றார். ஒரு அமைச்சர் கூட – கன்னிப்பேச்சில் குறுக்கிடாதீர்கள் என்று சொன்னார். உடனே சபாநாயகர், “கன்னிப் பேச்சு என்றாலும் கண்ணியமான பேச்சாக இருக்க வேண்டும்”- என்று குறிப்பிட்டு அவைக் குறிப்பிலிருந்தும் சுகுமாருடைய வார்த்தைகளை நீக்கினார்.

அவர் முதலில் அதிமுகவிலும் – பிறகு தமிழ் மாநில காங்கிரசிலும் இருந்ததை ஒளிவு மறைவில்லாமல் ஒருமுறை குறிப்பிடுகிறார். மிகக் கனிவாக, மிக கண்ணியமாக சிரித்த முகத்துடன் நடுநிலையுடன் சபையை நடத்தும் பண்பாளராக காலம் அவரை வடிவமைத்துள்ளது.

உண்மையில் தேர்தலுக்கு முன்பு ஜே.சி.டி. பிரபாகரனின் மகன் தவெக கட்சியில் சேர்ந்தார். அப்போது பிரபாகரன் எந்த கட்சியிலும் இல்லாமல் விலகி இருந்தார். அவருடைய பையனுக்குத் தான் எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று நிறுத்தினார்.  ஜெயித்தவுடன் சபாநாயகராக்கிவிட்டார்.

முந்தைய ஆட்சியில் சபாநாயகராக அப்பாவு இருந்தார். திமுகவை யார் விமர்சனம் செய்ய வாயை திறந்தாலும் உடனே முட்டு கட்டை போடுவார். ஆனால், பிரபாகரன்  இரண்டு பக்கமும் கண்டிக்கிறார். ஆளுங்கட்சி தவறாகப் பேசினாலும் கண்டித்து அதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார்.  

இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்று எதிர்க்கட்சியினரும் ஜேசிடி பிரபாகரனை பாராட்டுவதுதான் ஹைலைட். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link