News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி, வயது தடையால் வாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாழ்வாதாரக் கதவைத் திறந்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

 அரசு வேலை என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கனவு போன்றது. தமிழகத்தில் பயிலும் அத்தனை மாணவர்களும் போட்டித் தேர்வு எழுதி அரசு ஊழியராகத் துடிக்கிறார்கள். கடுமையான போட்டி நிலவும் சூழலில், இந்த தேர்வுகளை வெல்வது கடினமாகிறது. மீண்டும் மீண்டும் எழுதுவதற்குள் அவர்களுக்கு வயது உச்சவரம்பு முடிந்துவிடுகிறது.

இந்த குறையைத் தீர்க்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வயது வரம்பை மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தியிருக்கிறார் தமிழக முதல்வர் விஜய். குரூப் 1 முதல் குரூப் 4 வரை இனி 42 வயது வரை தேர்வு எழுதலாம் என முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார்.

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தியிருப்பதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால் BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு இந்த சலுகையும் கூடுதலாகக் கிடைக்கும்.

இந்த அரசாணைப்படி குரூப் – I பதவிகளுக்கான பொதுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு 32-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவுக்கு 42-ல் இருந்து  47 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-ல் இருந்து 52 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் குரூப் – II & II-A  பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 35 ஆகவும்,  ஒதுக்கீட்டுப் பிரினருக்கு உச்ச வயது வரம்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 வயதாகவும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் – IV பொதுப் பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 35 ஆகவும் பொதுப் பிரிவில் பட்டதாரிகளுக்கு 32-ல் இருந்து 37 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 35-ல் இருந்து 40 எனவும் 45-ல் இருந்து 50 வரை என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய அரசாணை இது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link