Share via:
கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான
மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து,
224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார்
முதல்வர் விஜய்.
இது வெறும் மானியம் அல்ல… திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு
கிடைத்த தீபாவளிப் பரிசு! பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின்
வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்
என்பதில் ஐயமில்லை என்று 224 தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக
விஜய்க்கு கோடான கோடி நன்றிகள் தெரிவிக்கப்படுள்ளன.
இதுகுறித்து பேசும் சினிமா விமர்சகர்கள், ‘’அரசு விருதுகள், மானியங்கள்
என்ற பெயரில் தங்களுக்குத் தேவையான நபர்களுக்கு மட்டுமே விருதுகளை விற்றுவந்த அரசியல்
நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்.
தமிழ் சினிமாவைத் தங்கள் குடும்பச் செழிப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி
வந்தவர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமல், எந்தவிதமான பயமும், சார்பும், பாதுகாப்பின்மை
உணர்வும் இல்லாமல் சுதந்திரமாகச் சிந்திக்கவும், எழுதவும், பேசவும் இந்த மாற்றம் வழிவகுக்கும்
என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எல்லாத் தொழில்களையும் போல சினிமாத் தொழிலும் மதிப்புமிக்கதாகத்
திகழ வேண்டும்; சினிமா உழைப்பாளர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்;
அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும்.
ஒட்டுமொத்தத் திரையுலகையும் ஒரு சிலரின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
போக்கும், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்கள் மிரட்டப்படும் சூழலும் இனியும் தொடரக்
கூடாது. திறமைக்கு அங்கீகாரமும், உழைப்பிற்குரிய மரியாதையும், படைப்பாளிகளுக்குச் சுதந்திரமும்
கிடைப்பதே ஆரோக்கியமான திரையுலகின் அடையாளம். விருதுகள் விற்கப்படும் பொருளல்ல; அவை
சிறந்த படைப்புகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அதிகாரத்தின் நிழலில் அல்ல, திறமையின்
வெளிச்சத்தில் கலைஞர்கள் வளர வேண்டும்! தமிழ்ச் சினிமாவின் கண்ணியத்தையும், படைப்புச்
சுதந்திரத்தையும், உழைப்பாளர்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் புதிய மாற்றத்தின் தொடக்கமாக
இந்த முன்னெடுப்புகள் அமையட்டும்.’’ என்று பாராட்டியுள்ளனர்.

