News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026..

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட  

இதில் நேற்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று சரணடைந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மத்திய சிறையில் இருக்கும் அன்வர்தீன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனியை சேர்ந்த அன்வர்தீன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. அடுத்தடுத்து பல வில்லங்கம் வருவதைப் பார்த்தால் இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும், எல்லாமே திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது.

யாரை காப்பாற்ற அன்வர்தீனை பலியாக்கினார்கள் அமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகள் இந்த கோடி ரூபாய் மோசடியில் தொடர்பு என தகவல் வருகிறது அப்படி என்றால் ? அந்த முக்கிய புள்ளிகளை காப்பற்ற அன்வர்தீன் கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி வருகிறது.

எனவே இந்த விவகாரம் குறித்து அதிமுக, ‘’பழனி கோவில் நில முறைகேடு வழக்கில் கைதான சார்பதிவாளர் மருத்துவனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த நிலையில், நிலமுறைகேடு வழக்கில் கைதான நபர் போலீஸ் காவல் முடிந்து நேற்று சிறையில் அடைத்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழப்பு என்று செய்தி வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தான் அஇஅதிமுக அன்றே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சொன்னது.. இதற்கு மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளிவருமா? உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் ரீல் முதல்வர்..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

நியாயமான கேள்வி. நடவடிக்கை எடுப்பாரா விஜய்..? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link