News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை 2023 தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய (அக்.20) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு […]

காஸாவுக்கு உதவலாம்! எகிப்துக்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல்!

காஸாவில் மனிதநேய உதவி வழங்கலாம் என்று எகிப்து நாட்டுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.   காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட தில் 500 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   இஸ்ரேல்&ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தற்போது 13வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இருதரப்பிலும் உயிரிழந்து […]

அனைத்து மதத்தினரும் இதை செய்யுங்கள்! போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

வருகிற 27ம் தேதி உலக அமைதிக்காக அனைத்து மதத்தினரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 13 நாட்களை தாண்டி செல்லும் போரில்  இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான அயல்நாட்டினரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக காஸாவில் உள்ள மருத்துவமனையில் ராக்கெட் விழுந்து 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை […]

பிரானா மீன்தொட்டியில் வீசப்பட்ட ராணுவ தளபதி! வடகொரியாவில் கொடூரம்!

வடகொரியாவில் தேச துரோகம் செய்ததாக கூறப்பட்ட ராணுவ தளபதி ஒருவர் ராட்சத மீன் தொட்டியில் வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா என்றாலே வினோதங்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் அளவுக்கு பல விசித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. உலகில் இருந்து வடகொரியா முற்றிலும் தனித்து நிற்கிறது. அதன் அதிபராக கிம் ஜாங் உன் தனக்கு பிடிக்காத நபர்களையும், தனக்கு ஆகாத நபர்களையும் மிகமோசமாக நடத்தி வருகிறார் என்று இணையத்தில் செய்தி […]

காஸா மருத்துவமனை தாக்குதல்! முதலமைச்சர் டிரெண்டிங் பதிவு!

காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலால் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் நெஞ்சை உருக வைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஸா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் குற்றம்சாட்டினர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை என்று இஸ்ரேல் ராணுவம் மழுப்பலான பதிலை சொல்லி வருகிறது. மருத்துவமனை […]

‘எக்ஸ்’ பக்கத்தில் இருக்கிறீர்களா? இனி இதெல்லாம் இலவசம் கிடையாதாம்!

இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான […]

மருத்துவமனை மீது தாக்குதல்! ஏவுகணை வீசியது காஸாவா இஸ்ரேல் ராணுவமா?

காஸாவில் இயங்கி வரும் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது. காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்த நிலையில் 10 லட்சத்திற்கும் அதிமாக மக்கள் காசாவை விட்டு […]

காஸாவில் பலியான ஊழியர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு! ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

காஸாவில் கொல்லப்பட்ட மீட்பு மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.   இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தாக்குதல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.  இதில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், பணியில் இருந்த மனிதாபிமான ஊழியர்களும் கொல்லப்பட்டனர். எனவே பலி எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.   காஸாவில் […]

ஹமாஸ் முக்கிய தலைவர்களை நெருங்கிவிட்டோம்! இஸ்ரேல் தகவல்!

ஹமாஸ் அமைப்பை இந்த பூமிப்பந்தில் இருந்தே முற்றிலுமாக துடைத்தெறிவோம் என்று இஸ்ரேல் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது உலக  நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இஸ்ரேல்& ஹமாஸ் இடையிலான போர் ஒரு வாரத்தையும் தாண்டி உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பினர் 199 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.   ஒரு பக்கம் இஸ்ரேல் நடத்தும் வான்வழி உள்ளிட்ட தாக்குதல்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் […]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த மைதானம்!

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! அகமதாபாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!   உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 12வது லீக் போட்டி நடைபெற உள்ளது.   உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துவிடும். அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2 அணிகளும் உலகக்கோப்பை […]