News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கோவிஷீல்டு தடுப்பூசியில் பக்கவிளைவுகள்… அதிர்ச்சி தரும் அறிக்கை

கொரோனா காலத்திற்குப் பிறகு இளவயதில் மாரடைப்பு போன்ற ரத்த நோய்களால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போட்டவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு அதனை மறுத்துவந்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா […]

விவிபேட் சீட்டு எண்ணிக்கை கிடையாதா..? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

வாக்குபதிவு இயந்திர வழக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் விடுத்திருந்த கோரிக்கை குறித்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளோடு, விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுக்களையும் நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த […]

துபாயில் செயற்கை மழையா…? வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்க்குது வானம்

வளைகுடா நாடுகள் என்றாலே கடுமையான வெயில், வறண்ட வானிலை என்றாலும் அவ்வப்போது அதீத மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் மழையை சந்தித்துள்ளது. வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் யுஏஇ மற்றும் ஓமனில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. துபாய் முழுவதும் […]

ராமருக்கு சூரிய திலகம்… தேர்தலுக்கு பா.ஜ.க. புது வகை சீட்டிங்

மக்களவைத் தேர்தல் 2024ல் பா.ஜ.க.வின் முக்கியமான சாதனையாக ராமர் கோயி காட்டப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பா.ஜ.க. பெருமையுடன் சொல்லிவரும் நிலையில், ராமர் நெற்றியில் சூரியக் கதிர் பொட்டு விழுந்திருப்பதாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தார்கள். ராம நவமியன்று மிகச்சரியாக பகல் 12.01 மணிக்கு அயோத்தி கோயிலில் உள்ள ராமரின் முன்நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு […]

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்தை பிடித்துள்ளார். உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்டு அர்னால்டு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2வது இடத்தில் ஜெப் பசோஸ் உள்ளார். புளூம்பெர்க் பில்லினியர்கள் குறியீட்டின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ஜூகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 58.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு […]

ஸ்டாலினுக்கு 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்… பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து மழை

இன்று 71வது பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அத்தனை கூட்டணிக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க.வினர் ஸ்டாலின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் […]

புதிய தலைமுறை கருத்துக்கணிப்பை விரட்டி விரட்டி அடிக்கும் எடப்பாடி டீம்

கடந்த முறை தி.மு.க.வில் சீட் வாங்கி ஜெயித்த பாரிவேந்தர் இப்போது பா.ஜ.க. பக்கம் நிற்கிறார். அதனாலோ என்னவோ அவர் சார்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு அ.தி.மு.க.வினரிடம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று தி.மு.க. கூட்டணிகளுக்கு 38.33 சதவிகிதமும் பா.ஜ.க.வுக்கு 18.48 சதவிகிதம் என்றும் அ.தி.மு.க.வுக்கு 17.26 சதவிகிதம் என்றும் நா.த.க.வுக்கு 7.26 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. தவிர மற்ற கட்சியினருக்கு இதுவரை எந்த கூட்டணியும் உறுதி செய்யப்படவே இல்லை, […]

அடேங்கப்பா, கருணாநிதி சதுக்கத்தில் இத்தனை ஹைடெக் அட்டகாசங்களா… பார்க்க மறந்துடாதீங்க…  

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கருணாநிதி சதுக்கத்தில் புத்தம் புதிதாக ஏராளமான ஏற்பாடுகள் அட்டகாசமாக செய்யப்பட்டுள்ளன. அண்ணா சமாதியில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி சமாதியில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை வடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற […]

கருணாநிதி நினைவிடம் திறந்துவைத்து ஸ்டாலின் நெகிழ்ச்சி… அண்ணாவுக்கும் மரியாதை

மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார். மெரினா கடற்கரையில் முதன்முதலாக அண்ணாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. தமிழினத் தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை […]

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா பெயரில் மெகாமோசடி… தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வங்கிப் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய குடிமகன் ஒவ்வொரு நபரும் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் பிரதமர் மோடியின் படத்தையும் மோசடியாளர்கள் இடம் பெறச் செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன் அந்த விளம்பரத்தை […]