News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

2 உயிர்களை பலி வாங்கிய கூகுள் மேப்! என்ன நடந்தது தெரியுமா?

கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கோமாளி திரைப்படத்தில் கூகுள் மேப் காட்டிய வழியில் செல்லும் யோகிபாபு பல்வேறு இன்னல்களை சந்திப்பதையும், ஆட்டோக்காரருக்கு தெரியாத வழியா என்று ஜெயம்ரவி அவரை சரியான இடத்திற்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் இப்போது இந்த செய்திக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.   வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக கூகுள்மேப்பில் முகவரியை டைப் […]

18 மணிநேரம் தொடர்ந்து வேலை! உணவு டெலிவரி ஊழியரின் சோக முடிவு!

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் […]

நீட் தேர்வு எழுதிய மாணவி! பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை நீட் தேர்வு முறையால் நடைபெறுவதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.   சமீபத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூட பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடைசியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது நேர்மையாக நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.   நீட் தேர்வில் […]

வீட்டில் இருந்தபடியே பீர், ஒயின் ஆர்டர் செய்யலாம்! ஸ்விக்கி, சொமாட்டோ முடிவு!

மக்கள் டோர் டெலிவரி என்ற வார்த்தைக்கு முழுவதும் அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். உணவு, மளிகைப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என்று அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் காலம் மற்றும் பணவிரயம் தவிர்க்கப்படுகிறது என்று மக்கள் எண்ணுகின்றனர். மக்களின் இந்த எண்ணத்தால் நாளுக்கு நாள் ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதோடு இந்நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கமும் செய்து வருகின்றன. அந்த வகையில் […]

நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்! ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து அதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.   அதன்படி இத்தேர்வில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று வினாத்தாள் கசிவு, பல […]

தயாராகுங்கள்! வெளியானது நீட் முதுநிலை தேர்வு தேதி!

ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலைத் தேர்வுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் ஆயத்தமாக உள்ளனர்.   நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை குறித்தும் பல்வேறு தரப்புகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.   இதற்கிடையில் கடந்த மாதம் (ஜூன்)23ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக […]

விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள்! பிரேமலதா எச்சரிக்கை!

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.   கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு […]

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்! லேப் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின் ஓலம் இன்னும் அடங்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் தெருவுக்கு தெரு இறுதிச்சடங்குகள் நடந்து பார்ப்பவர்களை கலங்கச் செய்தது.   இதற்கிடையில் விஷசாராயம் விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பல அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.   மருத்துவமனையில் போதிய மாற்று மருந்து மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் […]

தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்களுக்குப் பதவி. இனி, 117 மாவட்டச் செயலாளர்கள்?

முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பெரிதாக தலையிடுவது இல்லை. முக்கிய முடிவுகளை சபரீசனும் உதயநிதியுமே சேர்ந்து எடுத்துவருகிறார்கள். தி.மு.க.வில் அமைச்சர்கள் பதவிகளுக்கு இணையாக பார்க்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த திட்டமிட்டுக்கிறார்கள். இதற்காகவே உதயநிதி இப்போது இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசும் உதயநிதி ஆதரவாளர்கள், ‘’இப்போது திருச்சி, விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் மூத்த கட்சித் தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. […]

கோவிஷீல்டு போட்டவங்க அச்சப்படாதீங்க, இத்தனை காலத்துக்குப் பிறகு பாதிப்பு வராது

கோவிஷீல்டு மருந்து என்றாலே அது பக்கவிளைவு கொண்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் இப்போது மருத்துவர்கள் கூறிவரும் கருத்து. பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது. எல்லா மருந்துகளிலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும். பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள். முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல் […]