News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]

பற்றி எரிந்த ஏ.டி.எம்.! பல லட்சம் ரூபாய் பணம் நாசம்!

சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் எரிந்து சாம்பலானதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. ஓட்டல் ஊழியர்கள்  வியாபாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய சமயத்தில் அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓட்டல் அருகே இருந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் தீப்பற்றி எரிந்தது. […]

அடுத்த 10 ஆண்டுகளுக்கு யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு சிக்கல்! முக்கிய பின்னணி!

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சென்னை& பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன்  மோட்டார் சைக்கிளில் தனக்கு தானே விபத்தும் காயமும் ஏற்படுத்திக் கொண்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற […]

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்! முக்கிய தகவல்கள்!

கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடி மதிப்பிலான டெண்டரை தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைக்கான புதிய பேருந்து நிலையம் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மிகவும் பரபரப்பாக உள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி தாம்பரம்& செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே புதிய ரெயில் […]

இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.   ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது.   இப்போட்டித் தொடரில் இந்தியா, […]

நாளை 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து! என்னவென்று தெரியுமா?

நாளை (அக்.8) 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரட்ஜ் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு  பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.7) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணிவரையில் அந்த வழித்தடங்களில் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 14 ரெயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் […]

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்! அட்டகாசம் செய்யும் கடற்கொள்ளையர்கள்!

நாகை மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவிகளை அபகரித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், கோடிலிங்கம் ஆகிய 4 மீனவர்கள் நேற்று மாலை படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இவர்கள் 4 பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ஒரு படகில் 3 இலங்கை […]

இன்றே கடைசி நாள்! வங்கிகளுக்கு படையெடுக்கும் மக்கள்!

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் என்பதால் பொது மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்கிறார்கள். கடந்த மே மாதம் 10ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்புப் பெறுவதுதான் அது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். அதற்கான கடைசி நாள் கடந்த […]

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள்  ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள  சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது