News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கனவு இல்லத்தை பெறும் பயனாளர்களுக்கு வாழ்த்துக்கள்! சேப்பாக்கத்தில் உதயநிதி பேச்சு!

சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.   சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 1979ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டுகளில் 392 வீடுகள் கட்டப்பட்டன.   இந்த வீடுகள் அனைத்து பழுதடைந்த […]

காவிரி விவகாரம்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்?

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது நிதி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான லியாவுதீன் […]

5வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு! கட்டு கட்டாக பணம் பறிமுதல்?

தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க.எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை இன்று 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், […]

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாபாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு […]

5 மாநில தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் 12 மணிக்கு அறிவிப்பு!

நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.   தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய […]

சந்தியாவை கொலை செய்த சாதிச்சமூகம்! ஒருதலை காதல் போர்வை?

தான் வேலை செய்யும் கடைக்கான பொம்மைகளை குடோனுக்குள் அடுக்கிக் கொண்டிருந்த 18 வயதான சந்தியா என்ற இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்த 17 வயது சிறுவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறான். எங்கு செல்கிறது இந்த சமூகம் என்ற கேள்வியோடு இந்த கொலையும் அதன் பின்னணித் தகவல்களும் உங்களுக்காக.   நெல்லைக்கு மற்றொரு பெயர் என்று சொல்கிற அளவுக்கு உலகளவில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு […]

மகளிர் உரிமைத் தொகை கேட்டு போராட்டம்! எங்கே தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு […]

அக்.11ம் தேதி முழு அடைப்பு போராட்டம்! டெல்டா மாவட்டங்களில் பதற்றம்!

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் அதன் அமைப்புகளையும் கண்டித்து வருகிற 11ம் தேதி டெல்டா  மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என  காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும் கூட அதனை ஏற்க மறுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், ரெயில் மறியல், தர்ணா என பல்வேறு […]

முன்னதாக வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! முக்கிய அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் […]

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ! ஏன் தெரியுமா?

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் தங்பாண்டியன், தன்னிடம் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்து பெரும் சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தை தொட்ர்ந்து தங்பாண்டியன் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தங்பாண்டியனை இடைநீக்கம் செய்வதாக […]