News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தனது உடல்நலத்தை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.   இவ்வழக்கு சென்னை அமர்வு […]

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]

படிப்படியாக குறைந்து வரும் பால் கொள்முதல்! ஆவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!

ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஆவின் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதற்கான காரணம் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 13.10.2023 அன்று ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் கூறும்போது, ‘‘கடந்த செப்டம்பர் மாதத்தோடு அக்டோபர் […]

2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னையில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   நேற்று அதிகாலை (அக்.18) சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி இந்த சோதனை ஆயிரம்விளக்கு, எழும்பூர், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.   வரி ஏய்ப்பு தொடர்பாக பெறப்பட்ட ரகசிய புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இன்று […]

இன்று முதல் இலவசம்! தமிழக அரசு புதிய அறிவிப்பு!

நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நேற்று (அக்.18) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகரில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சாரந்த அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த […]

தனியார் மகளிர் விடுதிகள்! சென்னை மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு!

சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் அனைத்தும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்களில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதனால் சென்னையில் ஆங்காங்கே பல்வேறு தனியார் விடுதிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு […]

‘லியோ’ திரைப்படத்தை முடக்க சதி! வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!

திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.   கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை […]

ஓ.பி.எஸ். என் பக்கம் தான்! மனம் திறந்த சசிகலா!

ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, […]

முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேர்! என்ன ஆனது தெரியுமா?

ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மாலை நேரங்களில் பப்ஸ், சமோசா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் ஈரோடு அருகே நசியனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் அவரது 4 வயது மகள் தர்ஷினி ஆகிய3 பேரும் வில்லரசம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் […]

சின்னி ஜெயந்த் மகன்! மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் செயலாளர் ஆனார்!

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகைச்சுவை நடிகரான சின்னிஜெயந்த்தின் அனைத்து காமெடி காட்சிகளும் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்தான். அதிலும் ராஜா சின்ன ரோஜா கூட்டம் திரைப்படத்தில் அவர் சொன்ன ‘‘ஹான்’’ டயலாக் எப்போதுமே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட […]