News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது- அமைச்சர் உதயநிதி உறுதி!

சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி அதனை சந்திப்போம் என்று அமைச்சர் உதயநிதி மீண்டும் உறுதிபட தெரிவித்தார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல் திருமாவளவனின் சென்னை அசோக்நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி அவரிடம் கையெழுத்து பெற்றார். […]

நீட் தேர்வை முதல்முதலாக எதிர்த்தவர் கலைஞர்! உதயநிதி பெருமிதம்

நீட் தேர்வு சட்டமாக்கப்படுவதற்கு முன்பாகவே அதை முதல்முதலாக எதிர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.   தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பூர்வீமாக திருவாரூரில் தொடங்கி வைத்தார்.   இந்நிகழ்வின் போது இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘நீட் விலக்கிற்காக கையெழுத்திட்ட மாணவ – […]

தொழில்நுட்ப கோளாறு! 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை!

மின்சார உபகரணங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் 20 நிமிட இடைவெளியில் நீல வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று காலை 11.20 மணியளவில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென்று மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் […]

திசை திருப்பும் முயற்சி! ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி நேற்று (நவ.5) தீயாக பரவியது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்கள் நாய்க்கறி சாப்பிடுபவர் எனவும், மலைவாழ் பழங்குடியினரான […]

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]

சொத்து குவிப்பு வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகன் நேரில் ஆஜர்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்த போது ரூ.45 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு […]

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு -மருத்துவமனை அறிக்கை

இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதி.   முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது

அபிராமி அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ரைடு

அபிராமி மால் உரிமையாளர் ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை. சென்னை பல்வேறு இடங்களில் நடத்தி வரும் வருமான வரித்துறையினர் மால் உரிமையாளர் ராமநாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

பாலியல் வன்கொடுமைக்கு பின் 3 துண்டுகளாக்கப்பட்ட பெண்! அதிர்ச்சி தகவல்!

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அவரின் உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் பெண்கள் தங்களின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு பயந்து பயந்து வாழும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. தற்போது நடந்துள்ள கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநித்தில் அமைந்துள்ள பண்டா  கிராமம். இங்கு ராஜ்குமார் சுக்லா என்பவரின் வீட்டில் 40 வயதான தலித் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த […]

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது யார்? டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் […]