News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒவ்வொரு நாளும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் புதிய தலைமைச் செயலகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சட்டபேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் இன்று பேசுகையில், ‘’தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு சுற்றுலாவை விரிவுபடுத்தவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” (Motor Sports City) உருவாக்கப்படும். இந்நகரத்தில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்

இங்கு ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 (Formula 1, 2, 3, 4) உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான வசதிகள் இங்கு உருவாக்கப்படும். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்கவும், தமிழ்நாட்டை சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன், அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்’’ என்று கூறினார்.

தற்போதைய சார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது அவசியமாகிறது சென்னையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம், கிண்டியில் பொதுப்பணி துறையினர் இடம் தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வர் கடற்கரை அழகை ரசித்தபடி பார்க்கும் வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் வீடும் நீலாங்கரையில் ஒரு வீடும் வாங்கி உள்ளார். ஆகவே, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link