சர்வதேச இசையமைப்பாளரான கதீஜா ரகுமான்! ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் அவதாரம் எடுத்துள்ளது பாராட்டுதல்களை குவித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன்2 படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ என்ற பாடலையும் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதைத்தொடர்ந்து ‘மின்மினி’ என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராக […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம்! கே.எஸ்.அழகிரி பளிச்!

வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் தற்போது முழு இந்தியாவின் முழு பேச்சாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கட்சிகள் அந்தந்த மாநில கட்சி நிர்வாகிகளிடம் பிரசார யுக்திகளையும், தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்த […]
திரிஷா விவகாரம்! போலீஸ் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்!

திரிஷா விவகாரம் குறித்து நேரில் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று 2.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் என அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் பேசியதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக […]
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! டி.டி.வி.தினகரன் கண்டனம்!

ஆவின் நிர்வாகத்தை பெருக்க மாற்று ஏற்பாடுகளை கொண்டு வரும்படியும், பச்சை நிற ஆவின் விற்பனையை உறுதி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை அந்நிறுவனம் திடீரென்று முடிவு செய்துள்ளது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]
தொண்டை வலி சிகிச்சை எடுத்து வருகிறேன்! மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்!

நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல்!

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். […]
12 ஆண்டுகளுக்கு பிறகு! மதுரை கள்ளழகர் கோவில் குடமுழுக்கு விழா!

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை அருகே உலகப்பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் கள்ளகழகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ரூ.2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று முன்தினம் (நவ.21) யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. […]
பஞ்ச ரதங்களின் தேரோட்டம்! திருவண்ணாமலையில் விழாக்கோலம்!

பஞ்சரதங்களின் தேரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முழு முதல் கடவுளான விநாயகரின் தேரை மாட வீதிகளில் பக்தர்கள் இழுச் சென்றனர். அதற்கு அடுத்தபடியாக 2வது வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் 2 […]
தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடு ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி!

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியினர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு போன்று தி.மு.க. மாநாடு இருக்காது. மேலும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் […]
கலைஞர் நூற்றாண்டு விழா! புது சர்ச்சையால் பரபரப்பு!

எம்.ஜி.ஆர். நினைவுநாளன்று கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துவதா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. விழா அழைப்பிதழ்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், விஜய், அஜித், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும் வேலையும் ஆரம்பமாகியுள்ளது. […]

