நடிகைகள் குறித்து குட்டி பத்மினி சர்ச்சை பேச்சு! மீண்டும் மீண்டுமா?

நடிகைகள் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்றால் சிலவற்றை மறைத்தும் மறந்தும்தான் இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த ஒரு வாரமாக திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் செய்திதான் பேச்சுப் பொருளாக மாறியிருந்தது. ஒரு வழியாக மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்ட மன்னிப்பை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது சட்ட சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் பிக்பாஸ்7ல் பேசிய நடிகை விசித்ரா தனக்கு நடந்த […]
சென்னையில் தேங்கிய மழைநீர்! எங்கெங்கு தெரியுமா?

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. காலை நேரங்களைக் காட்டிலும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, ராயப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் […]
கொடநாடு வழக்கு! முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மகனுக் சி.பி.சி.ஐ.டி சம்மன்!

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தரிகியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் சொந்த பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் […]
‘‘ஸ்டார்ட் அப் தமிழா’’ ரியாலிட்டி ஷோ! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்!

ஸ்டார்ட் அப் தமிழா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ‘ஸ்டார்ட் அப் தமிழா’’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில் […]
பிரமோத்குமார் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்-! நீதிமன்றம் உத்தரவு!

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு […]
தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கோரி தொடர் முழக்கக் கூட்டம்! பா.ம.க. தலைவர் அன்புமணி உரை!

உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி நடைபெற்ற தொடர் முழக்க கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.ம.க.வினர் திரண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் திரளான வழக்கறிஞர் மற்றும் பா.ம.க.வினர் ஒன்றாக அமர்ந்து […]
28 பேரை கடித்து குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று! அச்சத்தில் ராயபுரம் மக்கள்!

சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. அமைதியாக இருக்கும் தெருநாய்கள் திடீரென்று தெருக்களில் சென்று கொண்டிருக்கும் பொது மக்களை கடித்து குதறும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் தெருநாய் […]
சக திரைநாயகி திரிஷா என்னை மன்னித்துவிடு! மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் […]
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்! பரபரப்பு தகவல்கள்!

ரூ.100 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஜூக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்றி நடித்து வரும் பிரகாஷ் ராஜூக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ், தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

(தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (நவ.23) தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி மற்றும் […]

