தமிழக அரசுக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று சொன்னதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் […]
குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]
9.13 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் புதிதாக 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை […]
சிக்கலில் குஷ்பு! பட்டியலின பெண்களின் போராட்டம் அறிவிப்பு!

குஷ்பு மன்னிப்பு கேட்கும் வரை ஓயுமாட்டோம் என்று பட்டியலினத்தைச் சேர்ந்த 500 பெண்கள் நாளை நடிகை குஷ்புவின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற […]
மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்! தனியார் கல்லூரி வாகனத்தில் பயங்கரம்!

கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எம்.பி.ஏ.மாணவர் ஒருவர் திடீரென்று பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு கல்லூரியின் வாகனத்தில் செல்வது வழக்கம். அதன்படி வழக்கம் போல் மாணவன் நிதிஷ்குமார் கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் அண்ணாமலை என்ற […]
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட முன்னாள் […]
அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுபகுதி! இந்திய வானிலை மையம் தகவல்!

அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது […]
மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்! முக்கிய தகவல்கள்!

மெட்ரோ ரெயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பீக் அவர்ஸ் மட்டுமல்லாது சாதாரண நேரத்திலும் கூட பொது மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். டிராபிக், சிக்னல் உள்ளிட்ட பிரச்சினைகள் இன்றியும், விரைவான மற்றும் சவுகரியமான போக்குவரத்துக்காக பயணிகள் மெட்ரோ ரெயிலை தேர்வு […]
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! முக்கிய தகவல்கள்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் அக்கார்டில் நேற்று (நவ.26) காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் முதலமைச்சர், அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வருகிற […]

