வில்லங்க வீடியோவில் சிக்கினாரா ஆதினம்..? சர்ச்சையில் சூரியனார் கோயில் மடாதிபதி

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி ஒரு பெண் பக்தையை திருமணம் செய்துள்ள விவகாரம் படு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பாலியல் வீடியோவில் சிக்கிக்கொண்ட காரணதால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார் என்று ஒரு செய்தி பரபரக்கிறது. திருவிடைமருதூர்: சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருக்கிறார் மகாலிங்க சுவாமி. இவர் கடந்த மாதம் 10ம் தேதி ஹேமாஸ்ரீ என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலானது. சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் சேர்த்து சொத்தைக் […]
கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்! பிரச்சினையை கையில் எடுத்த எச்.ராஜா!

கோவில் ரொம்ப புனிதமான இடம். அங்க கேலி, கிண்டல், கூத்துக்கு இடம் கிடையாது என்ற வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழகத்தில் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. உலகப்புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து சமீபத்தில் கிரிக்கெட் விளையாடினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகியான இளையராஜா கோவிலுக்கு வந்த நிலையில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை தன்னுடைய செல்போனில் வீடியோ […]
95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு? எது தெரியுமா?

கடந்த 95 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் மிகச்சிறந்த நாடு தான் வாட்டிகன். இதன் பரப்பளவு வெறும் 118 ஏக்கர்தான். இங்கு மருத்துவமனைகளே கிடையாது. மருத்துவமனை வேண்டும் என்று பல முறை கோரிக்கை எழுந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பெண்கள் கர்ப்பிணியானாலோ அல்லது மக்கள் நோய்வாய்பட்டாலோ அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும். வாட்டிகனில் […]
லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!

லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில் அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது எதற்காக என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு விவகாரம் சர்வதேச பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். […]
பிறந்தது புரட்டாசி மாதம்! திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!

தினந்தோறும் ஏழுமலையானை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம். காசுக்கடவுளான ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையும், அங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்த செய்தியுமே அக்கோவிலின் சிறப்பம்சங்களை விளக்கும். சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால், பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் என்றால் கேட்கவேண்டுமா? லடசக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனம் வேண்டி பல மணிநேரம் கால்கடுக்க காத்திருந்து குடும்பத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுக்கான செய்திதான்இது. திருப்பதிக்கு செல்வற்காக பல்வேறு […]
முருகன் மாநாட்டில் தி.மு.க.வுக்கு என்ன வேலை..? கம்யூனிஸ்ட் போர்க்கொடி

‘கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி’ என்ற சொன்ன ஒரு கூட்டம் தான் இன்றைக்கு முருகப்பெருமானின் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களுடைய நோக்கம் ஆன்மிகம் அல்ல, ஓட்டு வங்கி தான் என்று பா.ஜ.க.வினர் எதிர்ப்பு காட்டியிருக்கும் நிலையில், பழனியில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு 2024 என்ற பெயரில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை இந்து அறநிலையத் துறை நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகைக்குக் கூட வாழ்த்து சொல்லாத ஸ்டாலின், இந்த விழாவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், […]
தாஜ்மகாலில் இந்து அமைப்புகள் செய்யும் களேபரம்!

மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய காதல் சின்னம் தான் இந்த தாஜ்மகால். காதலர்கள் பெரும்பாலும் தனது துணைக்கு கொடுக்கும் பரிசுகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த தாஜ்மகால் உருவம் பொறித்த பரிசுப் பொருட்கள் தான். காதல் திரைப்படம் என்றால் இயக்குனர் உடனடியாக ஆக்ராவுக்கு படையெடுப்பார்கள். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மகாலுக்குள் ரகசிய அறைகள் உள்ளன என்றும் இதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவன்கோவில் இருந்தது என்றும் பலர் சர்ச்சைகளை கிளப்பியது அனைவருக்கும் […]
விருதுநகரில் சரத்குமார் செய்த வெறித்தனம்

நெல்லையில் நிற்பதற்கு பா.ஜ.க. சீட் தரவில்லை என்றதும் தன்னுடைய மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் நிறுத்தினார் நடிகர் சரத்குமார். அதோடு, தன்னுடைய கட்சியையும் பா.ஜ.க.வில் இணைத்துவிட்டார். இந்த நிலையில், விருதுநகரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் திடீரென அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார். மேல் சட்டையைக் கழட்டிவிட்டு கோயிலை உருண்டு வந்தார். அவர் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டது மட்டுமின்றி, ஆகோ… அய்யாகோ என்று கோஷம் போட்டார்கள். இது குறித்து பேசிய சரத்குமார் ஆதரவாளர்கள், ‘பிரதமர் மோடி […]
மோடி ஒரு தெய்வக் குழந்தையாம்… வைரலாகும் சர்ச்சை

ராமருக்குக் கோயில் கட்டினோம் அடுத்து கிருஷ்ணருக்கும் சீதா தேவிக்கும் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஒரு பேட்டியில் தன்னை ஒரு தெய்வ அம்சமாக நினைப்பதாகக் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பா.ஜ..க வேட்பாளராக சாம்பித் பத்ராவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணி நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்பித் பத்ரா, ‘புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்’ […]
ரஞ்சிதாவைப் பார்க்க கைலாசாவுக்கு இ-விசா. நித்தி அழைப்பு

நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் […]

