News

Follow Us

உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், குழந்தை ராமர் சிலை ஒன்று நிறுவப்பட்டு, திறக்கப்பட இருக்கிறது. அந்த சிலையை காலையில் பார்ப்பது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற தகவல் காரணமாக சிலையின் உருவம் விறுவிறுப்பாக பரவி வருகிறது.  

இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தை ராமர் சிலையின் கண்கள் மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியானது. இதையடுத்து அந்த விக்ரகத்தின் கண்களைத் திறந்துள்ள படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இது குறித்து விசாரித்தோம்.   

குழந்தை ராமர் சிலை கடந்த 1949-ம் ஆண்டில் ராம ஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த வெள்ளி சிலையின் உயரம் 6 அங்குலம் ஆகும். ராமரின் தம்பிகள் மற்றும் அனுமனின் சிலைகள் இதைவிட உயரம் குறைவாக உள்ளன. புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் பக்தர்கள் சுமார் 19 அடி தொலைவில் இருந்து குழந்தை ராமரை வழிபட முடியும். அவ்வளவு தொலைவில் இருந்து 6 அங்குலம் உயரம் கொண்ட குழந்தை ராமரை தெளிவாக பார்க்க முடியாது.

எனவே கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ், கணேஷ் பட்மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சத்யநாராயண் பாண்டே ஆகியோர் குழந்தை ராமர் சிலைகளை செதுக்கினர். கர்நாடகாவை சேர்ந்த இரு சிற்பிகள் கருங்கல்லிலும் ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி மார்பிள் கல்லிலும் சிலைகளை உருவாக்கினர்.

இறுதியில் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.

இந்த சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. பழைய 6 அங்குல குழந்தை ராமரின்சிலை, புதிய சிலைக்கு வலதுபுறத்தில் நிறுவப்படும். இந்த குழந்தை உருவத்தைச் சுற்றி ராமர் கதை சம்பவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 22-ம் தேதி ஆகம விதிகளின்படி சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

ராமர் அருள் புரியட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link