நீட் தேர்வு எழுதிய மாணவி! பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை நீட் தேர்வு முறையால் நடைபெறுவதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூட பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடைசியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது நேர்மையாக நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வில் […]
நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்! மக்கள் அவதி!

ஆம்னி பேருந்துகளை போரூர் சுங்கச்சாவடியில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மதிக்காமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திக்கித்திணறுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். தென்மாவட்டங்களுக்கு பயணமாகும் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு முதல் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்காமல், இருக்கைகள் நிரம்பும் வரை நிறுத்தி வைத்து இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் […]
எஸ்.ஐ.க்கள், டி.எஸ்.பி.க்களுக்கு புது உத்தரவு! அனல் பறக்கும் காவல் துறை!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றிய சந்தீப்ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமினம் செய்யப்பட்டார். கடந்த (ஜூலை)5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் […]
ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து! சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டீசல் பேருந்துக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் எரிவாயு பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறைவான விலையில் பேருந்துகள் இயக்கப்படுவதுடன் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அடையாறு பணிமனையில் இருந்து பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை பயணிக்கும் தடம் […]
ரஞ்சிதாவைப் பார்க்க கைலாசாவுக்கு இ-விசா. நித்தி அழைப்பு

நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் […]
பட்டாசு ஆலையில் 10 பேர் பலி. நிரந்தரத் தீர்வுக்கு இதுவே வழி.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வெடிவிபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமாகி இருக்கின்றனது. மேலும் படு காயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிப்பதற்கு சிவகாசி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் 1087 பட்டாசு ஆலைகளும், 2963 பட்டாசு கடைகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இவ்வாறு இயங்கி […]
அரியலூர் டாப், வேலூர் லாஸ்ட். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இன்று வெளியான தேர்வு முடிவின் படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. […]
திருப்பூர் ஃபர்ஸ்ட் திருவண்ணாமலை லாஸ்ட். +2 தேர்வு முடிவுகள்

தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம […]
இத்தனை காலமா ஏமாத்தியிருக்கானுங்க… ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா ஆரோக்கிய பானம் இல்லையாம்.

உடல் நலமில்லாத யாரையாவது பார்க்கச் சென்றால் ஹார்லிக்ஸ் வாங்கிச் செல்வதும், உயரம் குறைவாக இருக்கும் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா வாங்கிக் கொடுப்பதும் காலம் காலமாக நடந்துவருகிறது. இந்த பானங்களில் அப்படிப்பட்ட ஆரோக்கிய சத்துக்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகியிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் அவரது தளத்தில், ‘போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல. அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 […]
உணவுப் பொருளில் திரவ நைட்ரஜன் கலக்கப்பட்டால் அபராதம், உரிமம் ரத்து.. அதிரடி உத்தரவு

சமீபத்தில் கர்நாடகாவில் சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வலியால் துடித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரவ நைட்ரஜனை நேரடியாக எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களில் கலக்கக்கூடாது எனவும் அனுமதி வழங்கப்படாத உணவுப் பொருளில் கலந்து தயாரிக்கவும், சமைத்து விற்பனை செய்யவும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மூலம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு சென்னை உணவுப் […]

