பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 10ம் தேதி வயநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 30ம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினன் மேற்கொண்டுவரும் […]
தாயின் நகைகளை திருடிய 9ம் வகுப்பு மாணவன்! என்ன செய்தான் தெரியுமா?

காதலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட 9ம் வகுப்பு மாணவன் செய்த காரியம் டெல்லி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 3ம் தேதி (ஆகஸ்ட்) டெல்லி நஜாப்நகரை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று டெல்லி போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதாவது தனது வீட்டில் இருந்த 2 தங்க சங்கிலிகள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரம் காணாமல் போனதாக அந்த புகார் மனுவில் […]
வயநாடு நிலச்சரிவு: சேதமடைந்த தற்காலிக பாலம்!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகமான பெய்லி பாலம் சேதமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நீர் மற்றும் சேறு சகதியால் சூழப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சூரல்மலை முண்டகை இடையே நிவாரணப் பணிகள் தொய்வடைந்தன. அதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை ஆற்றை கடந்து செல்ல முடியாத […]
தாஜ்மகாலில் இந்து அமைப்புகள் செய்யும் களேபரம்!

மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய காதல் சின்னம் தான் இந்த தாஜ்மகால். காதலர்கள் பெரும்பாலும் தனது துணைக்கு கொடுக்கும் பரிசுகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த தாஜ்மகால் உருவம் பொறித்த பரிசுப் பொருட்கள் தான். காதல் திரைப்படம் என்றால் இயக்குனர் உடனடியாக ஆக்ராவுக்கு படையெடுப்பார்கள். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மகாலுக்குள் ரகசிய அறைகள் உள்ளன என்றும் இதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவன்கோவில் இருந்தது என்றும் பலர் சர்ச்சைகளை கிளப்பியது அனைவருக்கும் […]
தப்பியோடிய ஷேக் ஹசீனா! இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா?

வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மாணவர்களின் போராட்டம் […]
வயநாடு நிலச்சரிவு: பேரழிவிலும் அதிர்ச்சி சம்பவம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் அனைத்து மாநில மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ம் தேதி அதிகாலை 1 மணியில் இருந்து 3 மணிவரை தொடர்ந்து 4 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அட்டமலை, வெள்ளரிமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய குக்கிராமங்களில் என […]
தமிழ்நாட்டில் கனமழை: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்க கனமழையும், விட்டுவிட்டும் மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், […]
வயநாடு நிலச்சரிவு: ராகுல்காந்தி, பிரியங்கா நேரில் ஆய்வு!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதுவரை 291 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த சிலர் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோட தமிழக அரசின் சார்பில் கேரள மாநிலத்திற்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பலர் நிவாரண […]
ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டில் விற்பனை! ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு அரசு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி நியாய விலைக்கடைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. மேலும் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் குறைந்த […]
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள்! உரிமையாளர்களுக்கு புது உத்தரவு பிறப்பித்த சென்னை மாநகராட்சி!

பரபரப்பான சாலைகள் மற்றும் குறுக்கு தெருக்களில் கால்நடைகள் அதிகளவில் நடமாடுகிறது. அவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் முட்டி தாக்குகிறது. இதனால் சில உயிரிழப்புகளும், பலத்த காயங்களும் ஏற்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பள்ளி முடித்து தாயுடன் சென்ற சிறுமியை 2 மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது மாடுகளிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற நீண்ட நேரம் முயற்சித்து பின்னர் மீட்டனர். இது குறித்த பரபரப்பான […]

