News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தன் சோகத்தை மறைத்துக்கொண்டு, மயானத்தில் கண்ணீர் மல்க நன்றி கூறிய சைதை துரைசாமி..!

பெற்ற பிள்ளையின் மரணத்தை பார்ப்பதே, பெற்றோருக்கு மிகக்கொடிய துன்பம் தரக்கூடியது என்பார்கள். அத்தகைய பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் மனிதநேய அறக்கட்டளை தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி. இந்த நிலையிலும் தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கு நன்றி கூறி நெகிழ வைத்திருக்கிறார். இமாசல பிரதேசத்தில் அவரது மகன் வெற்றி விபத்தில் சிக்கி எட்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உடல் கண்டு பிடிக்கப்பட்டது. வெற்றியின் உடலுக்கு தமிழகத்திலுள்ள அத்தனை முக்கியப் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். […]

10 லட்சம் பூக்களுடன் மலர்க் கண்காட்சி… சென்னை மக்களுக்கு குஷியோ குஷி

வழக்கமாக குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் மட்டுமே மலர்க் கண்காட்சிகள் நடத்தப்படும். இதனை எல்லோரும் பார்த்து ரசிக்க வாய்ப்பு இருக்காது. எனவே, அப்படியொரு மலர்க் கண்காட்சி சென்னையில் நடந்தால் எப்படியிருக்கும் என்று பரிசோதனை முயற்சியாக கடந்த ஜூன் மாதம் ஒரு மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது. அதற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த ஆண்டு சென்னை செம்மொழி பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் […]

5வது ஆம்புலன்ஸ் கொடுத்து மாஸ் காட்டிய நடிகர் பாலா… ஆனந்தக் கண்ணீரில் மலைக்கிராம மக்கள்

மிக்ஜாம் புயல் நேரத்தில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகர் பாலா. அதன்பிறகும் உதவி செய்வதை பாலா நிறுத்தவே இல்லை. சரியான சாலை வசதியும் வாகன வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து மக்களின் துயர் துடைத்து வருகிறார். அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மலைக்கிராமமான நெக்னா பற்றி […]

பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் பெயரில் ஏறு தழுவுதல் அரங்கம் திறந்துவைப்பு..!

நூலகம் கட்டுவதாக இருந்தாலும் சரி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவதாக இருந்தாலும் சரி அதற்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆளும் தி.மு.க. அரசு. இந்த நிலையில் மதுரையில் தொடங்கப்படும் ஏறு தழுவுதல் அரங்கிற்கு கலைஞர் பெயரை சூட்டக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் நிறையவே அழுத்தம் கொடுத்துவந்தனர். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் அட்டகாசமாக திறப்புவிழா நடத்தி ஏழு தழுவுதலை தொடங்கி வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் என்று இதனை […]

மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சென்னை மாநகராட்சி ஆணையர்! என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதோடு சளி, காய்ச்சல்  காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசும் போது, ‘‘சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு 3 நாட்களில் புழுக்களாக மாறி, […]

கரிசல் இயக்கத் தந்தை கி.ரா.வின் 100வது பிறந்தநாள் இன்று! இத்தனை சாதனைகளா?

கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரின் சாதனைகளையும், சேவைகளையும் அனைவரும் அறியச் செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.   கோவில்பட்டி மக்களால் கி.ரா.என்று சுருக்கமாக அழைக்கப்படுபவர்தான் கி.ராஜநாரயணன். 1922ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கோவில்பட்டி அருகில் உள்ள இடைசேவல் கிராமத்தில், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியின் 5வது பிள்ளையாக பிறந்தார். இவருடைய முழு பெயர் ராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.   கி.ராஜநாராயணன் இயல்பில் […]