தமிழக ஆளுநர்- பிரேமலதா விஜயகாந்த் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது தெரிவித்ததாக கூறினார். மேலும் தேசிய நதிகளை இணைக்க […]
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்! குற்றப்பத்திரிகை தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றம் […]
நாம் தமிழர் மேடை மீது கல் வீச்சு! சீமான் கொடுத்த மாஸ் பதில்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் சிலர் மேடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கற்கள் மேடைக்கு […]
காவிரி விவகாரம்! போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி!

காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூர் நகரங்களிலும், கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் திரைப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் விழா மேடையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திரைத்துரையினர் […]
அக்.3ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! முக்கிய பின்னணி!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை […]
தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.வி. தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துவதில் தொடங்கி, தமிழ்நாடு, தமிழகம் என்று அழைக்கும் சர்ச்சை என பல்வேறு எதிர்மறை எண்ணங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக […]
மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்! முக்கிய பின்னணி!

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 2வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டால் 20 […]
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது. புதிய நாடாளுமன்றத்தில் கூடிய சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேராதரவுடன் மசோதா ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மகளிர் […]
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்! முக்கிய பின்னணி!

அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு மாற்றப்பட உள்ள நீதிபதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகிய நீதிபதிகள் முதல் அமர்வில் பொதுநலன் மனு, ஆட்கொணரவு மனு, […]
சுங்கச்சாவடிகளை திட்டித்தீர்த்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை! முக்கிய பின்னணி!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கட்டணத்தை வசூலிப்பதிலேயே சுங்கச்சாவடிகள் குறியாக உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை நெடுஞ்சாலையில் கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் சாலைகளை சரி […]

