News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்! தொண்டர்கள் அதிர்ச்சி!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கே.வேணு திடீர் உடல்நலக்குறைவு குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.வேணு மறைவுக்கு அப்பகுதி […]

சாலையோரம் உணவருந்திய அண்ணாமலை! சிலிர்க்கும் தொண்டர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் போது நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் காரில் அமர்ந்தபடி அண்ணாமலை உணவு அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட பகுதிகளான பல்லடம், அவுநாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற யாத்திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் […]

நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாத சிறை! பரபரப்பு தகவல்கள்!

நடிகையும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, கடைசியாக தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக […]

ராஜஸ்தானில் இன்று பிரியங்கா காந்தி பரப்புரை! தொண்டர்கள் உற்சாகம்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார்.   சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.   அந்த வகையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற […]

பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரில் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.   மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திபீட நிறுவனர் பங்காரு அடிகளார் (வயது 82) நேற்று மாலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின்  உடல் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.   பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியை கேட்ட சக்திபீட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘‘அம்மா… அம்மா’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு அனைத்து மாநிலங்களில் […]

தெலுங்கானாவில் பா.ஜ.க.வால் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? -ராகுல்காந்தி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர்.   சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன.   அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் […]

டி.கே.சிவக்குமாருக்கு வந்த சிக்கல்! அரசியல் களத்தில் பரபரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கை சி.பிஐ. பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த […]

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தனது உடல்நலத்தை காரணம் காட்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.   இவ்வழக்கு சென்னை அமர்வு […]

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]

படிப்படியாக குறைந்து வரும் பால் கொள்முதல்! ஆவின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!

ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘ஆவின் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதற்கான காரணம் பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 13.10.2023 அன்று ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் கூறும்போது, ‘‘கடந்த செப்டம்பர் மாதத்தோடு அக்டோபர் […]