பங்காரு அடிகளார் மறைவு! பிரதமர் இரங்கல் கடிதம்!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் கடிதத்தை பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்து அனுப்பி ஆறுதல் கூறினார். ஆதிபராக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி (அக்டோபர்) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதிபராசக்தி […]
உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்! எப்போது தெரியுமா?

வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை […]
அடுத்த 2 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நடைபெற்ற ஹெல்த் வாக் சாலை ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி 38 மாவட்டங்களில் 8 கி.மீட்டர் தூரம் கொண்ட ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் […]
தலைமை தேர்தல் அதிகாரியுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளதால் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் […]
நடிகரான இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்! முக்கிய தகவல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘அரிசி’ திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கும் இரா.முத்தரசனுடன், சிசர் மனோகர், கோவி.இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன் அன்பு, ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் […]
‘நீட் கையெழுத்து இயக்கம்”தொடக்கம்!

கழக இளைஞரணிச் செயலாளர் , மற்றும் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.கழகத்தின் இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணியின் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளோம். எப்படி, கடந்த ஆகஸ்ட் 20 […]
நவ.1ல் கிராமசபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் மாதம் 1ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமசபைக் கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15), காந்தி ஜெயந்தி (அக்.2), உலகநீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களில் நடைபெற்று வருகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்படும் […]
கொளத்தூர் தொகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானம்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் அமைந்துள்ள திரு.வி.க. நகர் பகுதியில் புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்துவைத்தார். ரூ.3 கோடி செலவில் திரு.வி.க.நகர், பல்லவன் சாலை பகுதியில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்தாட்ட மைதானம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இம்மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது புதிய மைதானத்தில் கால்பந்தாட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாஸ் போட்டு தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து ஜவகர் நகர் பகுதியில் […]
‘மிசா’வை நெஞ்சுரத்தோடு ஏற்றுக் கொண்டவர் கே.வேணு! முதலமைச்சர் புகழாரம்!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்.21) காலமானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், […]
முற்றும் மோதல்! 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா!

இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பிப் பெற்றுவிட்டதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய- கனடா நாட்டிற்கு இடையிலான மோதல் முற்றுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இந்தியா &கனடா நாட்டுக்கு இடையிலான நட்புறவு கேள்விக்குறியானது. அதனால் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவில் பணியாற்றி […]

