உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட […]
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த மாத்தூர் வேலுநகர் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]
தீபாவளிக்கு முன்பாகவே கலைஞர் உரிமைத் தொகை? குடும்பத்தலைவிகள் எதிர்பார்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத் தலைவிகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு […]
அரசு பள்ளிகளில் நாள்தோறும் நீட் பயிற்சி வகுப்புகள்! முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து […]
விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை! புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், […]
மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு வருகிற 25ம் தேதிக்குள் குறுந்தகவல் வந்துசேரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் […]
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! எப்போது தெரியுமா?

வருகிற டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நாட்டப்பட்டது. இந்த பாலம் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மக்களுக்காக அதனை திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் […]
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்- அமைச்சர் பொன்முடி!

மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாளை (நவ.2) மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்ட வீரரும், மூத்த இடதுசாரித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சங்கரய்யா தனது படிப்பை நிறுத்திவிட்டு […]
தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இன்று மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட 67வது ஆண்டை கொண்டாடி வருகின்றன. ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற தென் மாநிலங்களின் போராட்டங்கள் வலுத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்தது. இதைத்தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற […]
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வேண்டும்! முதலமைச்சருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

தீபாவளிக்கு மறுநாளான (நவ.13) திங்கட்கிழமையை பொதுவிடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு விடுமுறை தினம், ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் விடுமுறை போச்சே என்று அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரத்த கண்ணீர் வடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 2023ல் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என பல பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துவிட்டது. தற்போது வருகிற 12ம் தேதி தீபாவளி […]

