News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இலங்கை செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.   மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.   அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் […]

சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் 100% உயர்வு!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் உயர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கட்டிட அனுமதிக்கான கட்டணம் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தக் கட்டண உயர்வு வருகிற 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு மற்றும் பழைய கட்டிங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானங்களும் மாநகராட்சி மன்றக் […]

இன்று முதல் மின்கட்டணம் குறைப்பு! யாருக்கெல்லாம் தெரியுமா?

10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்று முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வகிப்பவர்களின் மோட்டார், மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு இதற்கு முன்னர் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைந்து கடந்த மாதம் (அக்டோபர்) 18ம் தேதி புதிய உத்தரவை பிறப்பித்தார். முதலவரின் அறிவிப்பைத் தொடர்ந்து மின்சாரத்துறை அதற்கான […]

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வருகிற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஈட்டுவோம் என்ற இலக்கை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். சென்னை பல்லாவரத்தில் சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறும்போது, ‘‘சர்வதேச கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவின் முதல் கட்டிடத்தை சென்னையில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி என்று கூறியதுடன் 2ம் கட்ட கேப்பிடல் ரேடியல் ஐ.டி. பூங்காவை தொடங்க தமிழக அரசு […]

தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்!

தமிழகத்தில் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   கேரளாவில் கடந்த 29ம் தேதி மதக்கூட்டரங்கில் திடீரென்று டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   அதைத்தொடர்ந்து தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை […]

சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார ஜாமீன் வழங்கிய ஆந்திர நீதிமன்றம்!

சிறையில் இருந்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஆந்திர நீதிமன்றம். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபடியே விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், சிறையில் இருக்கும் […]

டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது.   சென்னை நந்தனத்தில் டி.என்.பி.எஃப்.சி. (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.   குறைவான வருமானவரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வருமானவரி சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.   […]

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த  நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் […]

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு அவமரியாதை! தொண்டர்கள் அதிர்ச்சி!

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சிலர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்தராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் முத்துராமலிங்கத் தேவர் […]