அரசு பள்ளிகளை சீரமைக்க கோரி இந்து முண்னனி ஆர்பாட்டம் !

தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக நகர பொது செயலாளர் சிவராம் அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பள்ளிகளை சீரமைக்க. ஆர்பாட்டம் நடைபெற்றது.. அரசு பள்ளிகள் சீரமைப்பிற்கான கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது “தேனி மாவட்டத்தில் உள்ள பல அரசு கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமாகி வருகிறது. தற்போது கனமழை காரணமாக விபத்துகள் ஏற்பட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. எனவே […]
1 லட்சம் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் வேலை! எங்கு தெரியுமா?

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரை தொடர்ந்து பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற்றும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் 7ம்தேதி இஸ்ரேல் நாட்டுக்கும்- ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் மூண்டது. இன்றளவும் கடுமையாக போர் நடந்து வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை […]
மற்றொரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி,தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக […]
புதிய கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுங்கள்- எடப்பாடி பழனிசாமி!

புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘‘மின் கட்டணத்தை குறைக்கக் கோரி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், ஜவுளித்துறையினர் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் கடந்த 5ம் […]
தி.மு.க.வும் நானும் எதற்கு பயப்படமாட்டோம்! எ.வ.வேலு உறுதி!

தி.மு.க.வும், நானும் எதற்கும் பயப்படமாட்டோம் என்று அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதியாக தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. அதன்படி எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதேபோல் கோவையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா […]
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]
நாகாலாந்து விவகாரம்! ஆர்.எஸ்.பாரதிக்கு எச்சரிக்கை விடுத்த இல.கணேசன்!

நாய்கறி விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே அங்கே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டி அனுப்பி விட்டதாகவும், அப்படியானால் உப்பு போட்டு உண்ணும் தமிழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், […]
எ.வ.வேலு ஐ.டி.ரெய்டு! அந்த 2 சூட்கேசில் என்ன இருக்கிறது?

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கினர். பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். […]
அறிவாலயத்திற்கு அதிர்ச்சி தந்த பிரபலம்! அ.தி.மு.க.வில் இணைந்தார்!

தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளரான நசரேத் பசிலியான் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்து அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று கூறும் அளவுக்கு ஆகிவிட்டது அரசியல்களம். ஆளும் கட்சியில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் எதிர்க்கட்சிக்கு சென்றுவிடமாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரப்போகிறது என்றால் எதுவும் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளது இன்று நடந்த மிகப்பெரிய நிகழ்வு. தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளராக இருந்த […]

