234 தொகுதிகளில் தி.மு.க. வாகன பேரணி! அமைச்சர் உதயநிதி நாளை தொடக்கம்!

234 தொகுதிகளில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரமாண்டமான இருசக்கர வாகன பிரசார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.15) தொடங்கி வைக்க உள்ளதால் தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ‘‘மாநில உரிமைகளை மீட்க அழைக்கிறார் உதயநிதி’’ என்ற முழக்கத்தோடு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் பிரசார பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனப் பேரணியின் போது 188 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 234 […]
குழந்தைகள் தினம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதிவு!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசத்தின் பிணைப்பால் ஜவஹர்லால் நேருவை ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர். அதன்படி கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பின்னர் நவம்பர் 14ம் தேதி […]
காங்கிரசை காப்பியடிக்கும் பா.ஜ.க.! சொன்னது யார் தெரியுமா?

காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பியடித்துள்ளது. அவர்களுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லை என்று மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சாடியுள்ளார். மத்தியபிரதேசத்தில் 2ம்கட்ட தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாகர் மாவட்டம் ரஹ்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, ‘‘முதல்வர் சிவராஜ்சிங் கவுகான் ஒரு நல்ல நடிகராக இருப்பதால் மும்பைக்கு […]
இந்திய வம்சாவளி பெண் மந்திரி திடீர் பதவி நீக்கம்! முக்கிய தகவல்கள்!

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் திடீரென்று பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக். இவரது மனைவி அக்ஷயதா இந்தியாவில் பிறந்தவர். இவர் வேறு யாருமில்லை இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள். பிரதமர் ரிஷி சுனக் உள்பட இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் உள்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் […]
சத்தீஷ்கரில் காங்கிரசுக்கு முடிவு நெருங்கிவிட்டது! பிரதமர் மோடி பிரசாரம்!

இம்மாதம் 2 கட்டங்களாக சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன் காய் நகர்த்தி வருகிறது. இம்முறை கண்டிப்பாக சத்தீஷ்கரின் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளது. கடந்த 7ம் தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த […]
கேப்டன் விஜயகாந்தின் புதிய புகைப்படம்! கண்ணீர்விடும் ரசிகர்கள்!

தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு அழச்செய்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் என்றாலே கம்பீரம் என்று அர்த்தம். அவரது கணீர் குரலும் மிரட்டும் கண் விழிகளும், முரட்டுத்தனமான உடலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று தனி இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. கிராமத்துக் கதை என்றாலும், காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் என்றாலும் சரி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்சாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த்தான். குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் அவர் அடித்து உதைக்கும் […]
மீண்டும் ஆட்சி அமைந்தால்…. ம.பி.யில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் […]
பிரதமர் மோடி, அண்ணாமலையை வம்புக்கு இழுத்த பிரபல நடிகர்!

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோர் தான் சிறந்த நடிகர்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ‘‘அண்ணாமலையை தான் நேரில் பார்த்ததில்லை என்று சொல்லிய அவர், தமிழகத்தில் […]
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்! சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், சபாநாயகர் அப்பாவுவிடம் பல முறை மனு கொடுத்திருந்தார். அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வதுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கு! தலைமை தேர்தல் அதிகாரி கருத்து!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு புகழாரம் சூட்டியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை பிடிப்பது யார் என்ற ரீதியில் பிரதான கட்சிகள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தலை நடத்தி முடிக்கி தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் […]

