கிடப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதா! திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக அரசால் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், அதன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு, ஆளுநர் தமிழக […]
ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையும் விஜயசாந்தி! பா.ஜ.க. மீது அதிருப்தி!

தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. […]
தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் அமைச்சர் உதயநிதி!

சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்கு தயாராகும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாகி பேசுவதிலும், நியாயத்திற்கு குரல் கொடுக்கும் நான், சட்ட ரீதியில் அனைத்தையும் எதிர்கொள்வேன் என்று பேசி தமிழக இளைஞர்களால் அதிகளவு கவரப்பட்டு வருகிறார். அவரின் எளிமையான தோற்றமும், துணிச்சலான செயல்பாடுகளும் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். […]
திடீரென்று உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர்! ராஜஸ்தானில் பரபரப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுவதால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த குர்மீத் சிங் கூனர் உடல்நல குறைவு காரணமாக […]
நாட்டையே விற்றுவிடுவார்களா? சாலமன் பாப்பையா கேள்வி!

மதுரை ரெயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நாட்டையே விற்றுவிடுவார்களோ என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மதுரை ரெயில்வே மைதானம் மற்றும் ரெயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த வாரம் கையெழுத்து இயக்கம் […]
தியாகி சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதை! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கரய்யாவின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த அனைத்து […]
கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கம்யூனிஸ்ட்சி கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தகைசால் தமிழரான சங்கரய்யாவுக்கு வயது 102. நூற்றாண்டை கடந்த சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, […]
அரசு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் […]
ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!

பால்வளத்துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஈரோட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதே போல் திருநெல்வேலி மாவட்ட ஒன்றியத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி நிதியுதவியின் மூலம் கட்டப்பட்ட நூலகம், ஆய்வகம், விடுதி வசதியுடன் கூடிய பயிற்சி நிலைய கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன. அதேபோல் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் […]
பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பரபரப்பு தகவல்கள்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ரிஷிசுனக் திறமையாக கையாண்டு வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது. […]

