பொறுப்பை உணர்ந்து அடங்கி இருங்கள்! ஆளுநருக்கு முதல்வர் எச்சரிக்கை!

இன்றைய சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவிதான். இருந்தாலும் இருக்கும வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு அடங்கி செயல்பட வேண்டும் என்றும் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, […]
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற சிறப்புக்கூட்டத் தொடரை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய விளக்கங்கள் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்புக் கூட்டம் […]
அதிரடியாக உயர்ந்த தேர்வுக்கட்டணம்! மாணவர்கள் கடும் அதிர்ச்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டிகிர பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாண்டு […]
திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக அரசை கண்டித்து நாளை (நவ.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை கண்டித்து விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையை பா.ஜ.க. […]
கலைஞர் நூற்றாண்டு விழா! ரஜினிகாந்த், கமலுக்கு அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு தமிழ் திரையுலக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அரசியல், தமிழ் சினிமா என பன்முகத்தன்மை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் நூற்றாண்டு விழா’வுக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாக […]
சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்! பா.ஜ.க.வின் நிலை என்ன?

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை (நவ.18) கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த […]
மோசமடைந்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோத பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சுவலிக்கிறது என்று கூறியதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில் இதனை இ.எஸ்.ஐ.மருத்துவர்களும் உண்மை […]
ம.பி., சத்தீஷ்கரில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் 70 தொகுதிகளுக்கான 2ம்கட்ட வாக்குப்பதிவும் இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியினர் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். […]
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தலைமை செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக மேகநாத ரெட்டி கூடுதல் பொறுப்பு வகித்திருந்த நிலையில் தற்போது பிரதாப் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐ.எ.ஏஸ்.சை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை […]
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்! பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற (நவம்பர்) 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஆளும்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரசும், எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று […]

