News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! டி.டி.வி.தினகரன் கண்டனம்!

ஆவின் நிர்வாகத்தை பெருக்க மாற்று ஏற்பாடுகளை கொண்டு வரும்படியும், பச்சை நிற ஆவின் விற்பனையை உறுதி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   ஆவின் நிறுவனத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையை அந்நிறுவனம் திடீரென்று முடிவு செய்துள்ளது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இது குறித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]

தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடு ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி!

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க.  இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியினர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு போன்று தி.மு.க. மாநாடு இருக்காது. மேலும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் […]

கலைஞர் நூற்றாண்டு விழா! புது சர்ச்சையால் பரபரப்பு!

எம்.ஜி.ஆர். நினைவுநாளன்று கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நடத்துவதா என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்  நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. விழா அழைப்பிதழ்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், விஜய், அஜித், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் கொடுக்கும் வேலையும் ஆரம்பமாகியுள்ளது. […]

கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று (நவ.21) மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தும், ஆலோசனைகளையும் கூறியுள்ளதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.   அவர் கூறும்போது, […]

திரிணாமுல் கட்சி தொண்டர் சுட்டுக்கொலை! மேற்கு வங்கத்தில் பதற்றம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த வன்முறைகளில் நாட்டுத் துப்பாக்கிளால் சுட்டும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பலியும் ஏற்படுவதால் மேற்குவங்கத்தில் அடிக்கடி பரபரப்பு நிலவுகிறது. […]

முதல்வருக்கு கருப்புக்கொடி! இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை முதல்வர் பினராயி விஜயன் நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் நவகேரள சதஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனது மந்திரிகளுடன் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.   36 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் […]

கலைஞர் நூற்றாண்டு விழா! மாபெரும் செய்தியாளர்கள் சந்திப்பு!

திரைத்துறை சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைத்துறை சங்கம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தாஜ் கோரமண்டலில் செய்தியாளர்கள் […]

மத்தியபிரதேசத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசத்தில் இன்று ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில் அடர் என்ற தொகுதியில் கிஷுபுராவில் இயங்கிய வாக்குச்சாவடியில் மட்டும் சிலர் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்பதால் கிஷுபுரா வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாகுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று […]

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்! காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு!

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பி.ஆர்.எஸ். கட்சியினர் மற்றும் […]

இன்று மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க.  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் கட்சி கிளை அமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்த பிறகு வரவிருக்கும் 2024ம் ஆண்டு […]