விஜயகாந்த்தை வைச்சு அரசியல் வியாபாரம் தொடங்குகிறாரா பிரேமலதா..?

வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை திடீரென சிக்கலானது. இதையடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கே சென்று பார்த்து வந்தார்கள். விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அத்தனை பேரும் பிரார்த்தனை செய்தார்கள். ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். விஜயகாந்த் பூரண நலம் அடைந்துவிட்டார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. ஆனால், அதற்குள்ளாக […]
நீர்வழித்தடங்களில் வெள்ள பாதிப்புகள்! அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக நீர்வழித்தடங்களில் ஏற்பப்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.11) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நீரில் மூழ்கின. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் அவதிக்குள்ளானார்கள். […]
ஷபீருக்கு அடுத்து சிக்கிட்டாருய்யா ஆவுடையப்பன்… எல்லை மீறும் தி.மு.க.

சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலில் தி.மு.க.வினர் முந்தைய ஜெயலலிதா போன்று செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களை தி.மு.க. ஆதரவு உடன்பிறப்புகள் புரட்டிபுரட்டி அடித்துவருகிறார்கள். மழை வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், பல்வேறு பத்திரிகையாளர்களும், மீடியாக்காரர்களும் தி.மு.க. அரசை குறைகூறத் தொடங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் ஆகியோர் பம்பரமாக சுழன்றபோதும், தி.மு.க.வை விமர்சனம் செய்பவர்களை எல்லாமே எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து நியூஸ் மினிட் தன்யா […]
கேரளாவில் பதற்றம்! காரை வழிமறித்து மாணவர்கள் போராடியதாக ஆளுநர் குற்றச்சாட்டு!

Lorem nulla mollit laborum dolor exercitation ut. Et ut consectetur elit ullamco non. Id fugiat enim dolore sint ex enim non voluptate eu. Exercitation excepteur voluptate fugiat laboris quis adipisicing. Incididunt Lorem cupidatat laboris labore. Aliquip aliquip nostrud excepteur aliqua mollit ex amet non. Quis consequat velit deserunt in eiusmod magna amet ea est. Mollit […]
ரூ.6,000 நிவாரண தொகை! 3 தவணையாக வழங்கப்படுகிறதா?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பலர் வீட்டை […]
காஷ்மீர் போன்று தமிழகத்தை இரண்டாகப் பிரிக்குமா பா.ஜ.க. அரசு..?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.வை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில […]
மாமியார் கலாய்க்கிறது சரத்குமாருக்குத் தெரியலையா..? பா.ஜ.க.வுக்கு புது ரூட்டு

திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ‘உங்களை எப்போது முதலமைச்சரா பார்ப்பேன்னு என் மாமியார் கேட்கிறார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் கலகலப்பான விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளான பிறகும் கவுன்சிலர் ஆகவே வழியில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து மாமியார் கிண்டல் செய்ததை, நிஜமென்று நம்பி ஆதங்கப்படுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், அந்த குறும்புக்கார மாமியாரு யாருங்க என்று அவரது அத்தனை மாமியார்களையும் தோண்டியெடுத்து வம்பு இழுக்கிறார்கள். அதேநேரம், சரத்குமார் வேண்டுமென்றேதான் […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: காப்பகத்தில் தயாநிதிமாறன் எம்.பி. நிவாரண உதவிகள்!

மிக்ஜாம் புயல் பேரிடரை தொடர்ந்து சேத்துப்பட்டில் அமைந்துள்ள சர்வோதயா காப்பகத்திற்கு நேரில் சென்ற தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.5 கோடி வழங்கிய சன் குழுமத்தலைவர் கலாநிதிமாறன்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இம்மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய உதவிகளை வழங்கும் […]
தலா ரூ.1 கோடி வழங்கிய சன்மார் குழுமம், சக்தி மசாலா! மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணி!
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய்சங்கர் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளர். சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களை அவதிப்பட வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதுப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]

