News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பெண் டி.எஸ்.பி.யின் தலைமுடி பிடித்தவரின் கை உடைந்தது..! இது மட்டும் போதுமா..?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை ஒருவர் தலை முடியை இழுத்து தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த […]

மீண்டும் காவி திருவள்ளுவர்..? அண்ணாமலையை ஓரம் கட்டும் எல்.முருகன்

லண்டனுக்குப் படிக்கப் போயிருக்கும் அண்ணாமலை சில நாட்களாக எந்த சத்தமும் காட்டாமல் இருந்தார். ஆனால் இன்று திடீரென கப்பலோட்டிய தமிழனுக்கு பாராட்டு, மோடிக்குப் பாராட்டு என மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறார். இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மீண்டும் காவி திருவள்ளுவரை கையில் எடுத்திருக்கிறார் எல்.முருகன். உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு செய்திருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசினால் தி.மு.க.வினர் கொதிப்பார்கள் என்று தெரியும் என்பதாலே […]

விஜய்யை கவிழ்த்த வெங்கட்பிரபு.? கதை இது தான். சீமான் அறிக்கை பின்னணி ட்விஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தியேட்டரில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. பிளாக்பஸ்டர், சூப்பர் டூப்பர் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வந்தாலும் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ரொம்பவே சுமார், படு மொக்கை என்று கூறிவருகிறார்கள். குறிப்பாக விஜய்காந்த் மற்றும் வில்லனாக நடிக்கும் விஜய் காட்சிகளின் ஏ.ஐ. உருவாக்கம் சிறப்பாக அமையவில்லை என்பதால் […]

விநாயகர் சதுர்த்தி: சென்னை-& கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது வார இறுதி நாள் என்பதாலும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதாலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.   அதன்படி பயணிகளின் விருப்பத்திற்கிணங்க சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று (6ம் தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, […]

அரியானா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறாரா வினேஷ் போகத்?

வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.   2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. இம்முறை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்  பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வினேஷ் போகத்தை காங்கிரஸ் வேட்பாளராக […]

மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு! முதலமைச்சர் அறிவித்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு ரவிக்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.   சென்னை, மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த 59 வயதான ரவிக்குமார் நேற்று காலை (செப்3) வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். மீனம்பாக்கம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த அவர், காலை 11.15 மணியளவில் திடீரென்று சாலையோரமாக மயங்கி கீழே விழுந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு […]

அமித் ஷாவுடன் ஹெச்.ராஜா 40 நிமிடம் தீவிர ஆலோசனை. அண்ணாமலையை ஓரம் கட்டும் அசைன்மென்ட்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், மாநிலத்தில் கட்சிப் பணிகளைக் கவனிப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட ஹெச்.ராஜா டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவ சந்தித்திருப்பது அண்ணாமலை ஆதரவாளர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து ஹெச்.ராஜா, ‘இன்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியதை தெரிவித்து வாழ்த்து பெற்றேன். உறுப்பினர் சேர்க்கையை கிராமங்களில் கொண்டு செல்வதை துரிதபடுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்’ என்று மட்டும் […]

செல்லூர் ராஜூ, வளர்மதியை கைது செய்யுங்க… சீமானைக் காப்பாற்ற புது டெக்னிக்.

  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே அவ்வப்போது பேசி வரும் நாம் தமிழர் சீமான் அவ்வப்போது சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாக இருந்துவருகிறார். இந்த நிலையில் செல்லூர் ராஜூவையும் வளர்மதியையும் விடாதீங்க என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது சீமானை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டெக்னிக் என்று சொல்லப்படுகிறது. சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவு படுத்திய பிறகும் அதனை பொதுவெளியில் பயன்படுத்திய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கினை கையாள்வதற்கு சிறப்பு […]

எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன். விஜய்க்கு கோட். தி.மு.க. எதிர்ப்புக்கு குஷியாகும் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டைக் கொடுக்காமல் 2000 ரூபாய்க்கு விற்பவர்களால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என்று விஜய் மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். அதோடு, ’அரசியல் கட்சிக்குத் தலைவராக வேண்டும் என்றால் அவருக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு வேண்டும். அது விஜய்யிடம் சுத்தமா இல்லை’ என்று தி.மு.க.வினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கோட் படம் பார்ப்பதற்கு 2000 ரூபாய் தருவதற்கும் விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில், கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் […]

மேற்குவங்கத்தில் நிறைவேறிய முக்கிய மசோதா! நடுநடுங்கும் குற்றவாளிகள்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் முக்கிய மசோதா மேற்குவங்க மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   கடந்த மாதம் (ஆகஸ்டு) 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இச்சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பலகட்ட […]