திட்டமிட்டு ஊதப்பட்டதா மகாவிஷ்ணு சர்ச்சை..? அன்பில் மகேஸ் டிரைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு..?

’’எங்க ஏரியாவுக்குள்ள வந்து பேசுவதற்கு உனக்கு என்ன துணிச்சல், சும்மா விட மாட்டேன்’’ என்று மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளித்தார். இதையடுத்து மகாவிஷ்ணுக்கு எதிராக தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். அன்பில் மகேஸ் ரிசைன் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் மகாவிஷ்ணு விவகாரம் மிகப்பெரிய பேசப்பட்டு பரபரப்பானது. இத்தனை பெரிதாக அந்த விவகாரம் பேசப்பட்டதற்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததற்குப் பின்னணியில் […]
அண்ணாமலைக்கு வெளிநாட்டு சிறை..? வார் ரூம் போட்டோ ஆதாரம்

தமிழக பா.ஜ.க. இப்போது சீனியர்கள் கைக்கு மீண்டும் வந்துவிட்டது. அதனால் உட்கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் கிடுகிடுவென நடந்துவருகிறது. அண்ணாமலை போடும் பதிவை தமிழக பா.ஜ.க. கண்டுகொள்ளாத நிலை வந்துவிட்டது. எனவே பா.ஜ.க.வில் ஒரு டீம், ‘’அண்ணாமலை லண்டனுக்குப் படிக்கப் போகவில்லை, டெல்லி மேலிடத்தின் உத்தரவுப்படி வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும் கண்டிப்பு காட்டப்பட்டுள்ளது. அவர் லண்டன் காலேஜிக்குப் போனதை யாராவது பார்த்தீர்களா..?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதில் அளிப்பது போன்று, […]
ஸ்டாலினுக்கு சிகாகோவில் பிரமாண்ட வரவேற்பு. ரியல் கூட்டமா அல்லது ரீலா..?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரம்மாண்டாக நடைபெற்ற தமிழ் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் உண்மையானது இல்லை, போட்டோ ஷாப் என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக ஸ்டாலினின் உண்மையான புகைப்படம் வெளிவரவில்லை என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பியதையடுத்து, கையெழுத்துப் போடும் படம் ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விநாயக சதுர்த்தியன்று ஸ்டாலினுக்குப் பிரமாண்ட வரவேற்பு […]
விஜய் கட்சிக்கு முதல் சக்சஸ்… ஆனால், மாநாட்டுக்கு தி.மு.க. சிக்கல்..?

விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் கோட் படம் சூப்பர் ஹிட் வெற்றி அடையவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இப்போது அரசியல் உற்சாகத்துக்கு மாறிவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதற்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள். இன்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை […]
காங்கிரஸை ஜெயிக்க வைப்பாரா வினேஷ் போகத்..? ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்பு

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் வினேஷ் போகத், ‘’காங்கிரஸுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன், ஏனென்றால் கெட்ட காலங்களில் தான் நமக்குச் சொந்தம் யார் என்பதை நாம் உணருகிறோம். […]
ஸ்டாலினிடம் அடேங்கப்பா மாற்றம்… இந்தியாவின் முதல் ஹைடெக் முதல்வர்

அறிவியல் வளர்ச்சியை முன்னெடுத்துக் கொண்டுசெல்வதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் நிற்கும். அந்த வகையில் இ-ஆபிஸ், செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகள் என்று இந்தியாவின் முதல் ஹைடெக் முதல்வராக அசத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது என்று இ-சைன் போடும் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதையடுத்து ’செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் […]
விமான நிலையத்தில் மஹாவிஷ்ணு கைது..? வாய்க்கொழுப்புக்கு தயாராகும் வழக்குகள்

அரசு பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியருடன் மல்லுக்கட்டிய மஹாவிஷ்ணு கைது அச்சத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துபோனார். இந்த நிலையில் அவருக்கு பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை கிண்டல் செய்வது போல் பேசியிருக்கிறார். எனவே, அவரை விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசு பள்ளியில் நடந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் மகாவிஷ்ணு, பள்ளி கல்வித்துறை அமைச்சர ‘அவர் அளவுக்கு எனக்கு அறிவிருக்கா என்னன்னு தெரியல’ன்னு கிண்டல் […]
மகாவிஷ்ணு விஷயத்தில் சீமான் இப்படி சொல்லிட்டாரே..? அதிர்ச்சியில் நாம் தமிழர்கள்

பள்ளிக் கூடத்தில் பாவம், புண்ணியம் பாடம் எடுத்ததுடன் நில்லாமல் மாற்றுத் திறனாளியை அவமானப்படுத்திய மஹாவிஷ்ணுக்கு ஆதரவாக பா.ஜ.க. களத்தில் நிற்கிறது. இதுவரை மஹாவிஷ்ணுவை கண்டிக்காத சீமான், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பது அவரது கட்சியினரிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. சீமான் இன்று, ‘’சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ – மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பிட்ட […]
ஆன்மீக சொற்பொழிவு: பணியிடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை!

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேலநிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் மத்தியில் மகாவிஷ்ணு மூடநம்பிக்கையையும், பிற்போக்குத்தனமான கருத்துகளையும் சொற்பொழிவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சொற்பொழிவை கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்த மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. அவர் பேசும்போது, மாணவிகள் அழகாக பிறக்காததற்கும், மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கும் முற்பிறவிகளில் அவர்கள் செய்த பாவம்தான் காரணம் என்று பேசினார். மேலும் மறுபிறவி, பாவம், புண்ணியம், […]
சீமானை கைது செய்வதற்கு பயம்..? தி.மு.க. ஒப்புதல் வாக்குமூலம்

சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வழக்கு போடப்பட்டிருக்கும் சூழலில் இன்னமும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முடிந்தால் என் மீது கை வைத்துப் பாருங்கள் என்று மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். அதோடு, தமிழகத்தில் போதைக் கலாச்சாரத்துக்கும் அறநிலையத் துறை மற்றும் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடிகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மட்டும் குற்றம் சுமத்துவது சரியில்லை. அத்தனை நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முதல்வர் ஸ்டாலினே காரணம் என்று தொடர்ந்து தி.மு.க. மீது சீமான் தாக்குதல் நடத்துகிறார். […]

