News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்! அரியானா சட்டசபை தேர்தலில் பரபரப்பு!

அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முழுமுனைப்புடன் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்து வருகிறது.   வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெறுகிறது.   அரியானாவில் 2 முறை ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. மூன்றாவது முறையா ஹாட்ரிக் வெற்றி பெற முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இம்முறை பா.ஜ.க.விடம் […]

செந்தில் பாலாஜி விடுதலைக்கு நோ சான்ஸ்… என்ன காரணம்னு கேளுங்க.

செந்தில் பாலாஜியை எப்படியாவது சிறையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக தி.மு.க. போராடி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரது பதிவில், ‘’தி.மு.க. வழக்கறிஞர் அணியின் தவறான செயல்பாடுகளால் இப்பொழுது செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது. முறையான கைதி என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. […]

நிவேதா பெத்துராஜ் தொடங்கி ஜெயலலிதா வரை அவமானப்படுத்துறாங்க.. ஐ.டி. விங் அலப்பறைகள்.

சென்னையில் ஃபார்முலா ரேஸ் நடத்தப்போவதாக உதயநிதி அறிவிப்பு செய்ததில் இருந்தே, இந்த போட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து செய்தி பரப்பினார்கள். ரோடு சரியாக இல்லை, ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் நாய் ரேஸ் நடப்பதாகக் கிண்டல் அடித்தார். நீதிமன்ற வழக்கு, மழை மிரட்டல் போன்ற பஞ்சாயத்துக்களைக் கடந்து […]

காந்தகார் விமான கடத்தல் சீரிஸ்க்கு தடை..? வாஜ்பாயைக் காப்பாற்றும் மோடி

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஐ.சி. 818 காந்தகார் ஹைஜாக் தொடரை முடக்குவதற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த நேரத்தில் நடந்த இந்த மாபெரும் அவமானத்தை மூடி மறைப்பதற்கு மோடி அரசு முயற்சி செய்வதாக கண்டனம் எழுந்திருக்கிறது. இந்திய தேசத்தின் பிரதமராக பா.ஜ.க.வின் வாஜ்பாய் இருந்த நேரத்தில் கந்தகார் விமான ஹைஜாக் நடைபெற்றது. அந்த முயற்சியை முறியடிக்க முடியாமல் மேளதாளத்துடன் தீவிரவாதிகளை அனுப்பிவைத்தது […]

வானதி சீனிவாசனுக்கு இம்புட்டுக் கோபமா..? அண்ணாமலை பாணியில் அதிரடி

சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு விமர்சனம் முன்வைத்தார். இதற்கு உடனடியாக மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், ‘’மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு… என்று கிண்டல் செய்திருந்தார். மேலும் தி.மு.க. […]

உதயநிதியை பாராட்டி தள்ளிய பா.ஜ.க. நிர்வாகி! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது என்று பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகழ்ந்து தள்ளியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்து பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயமானது புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையம் செய்திருந்தநிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.     இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்ட […]

நிரந்தரத் தலைவர் ஆகிறாரா ஹெச்.ராஜா..? அண்ணாமலை திட்டமிட்டு புறக்கணிப்பு

சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துத் திரும்பிய ஹெச்.ராஜா, தமிழக பா.ஜ.க.வின் நிரந்தரத் தலைவராகத் தொடர்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து, அண்ணாமலை ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார்கள். பா.ஜ.க. மேலிடத்தின் மூலம் ஹெச்.ராஜா நியமனம் செய்யப்பட்டார் என்றாலும், அண்ணாமலை கை காட்டியதாலே இந்த பதவி கிடைத்தது. இது அண்ணாமலை போட்ட பிச்சை என்றெல்லாம் அண்ணாமலையின் ஐ.டி. விங் ஆட்கள் செய்தி பரப்பிவருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுப்பது போன்று அடுத்தடுத்து ஹெச்.ராஜா நடத்திவரும் சந்திப்பு மற்றும் […]

தள்ளிப் போகும் விஜய் மாநாட்டு..? தி.மு.க. உள்குத்து

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு வந்துவிட்டால் உதயநிதிக்கு சவாலாக இருப்பார் என்பதால் தி.மு.க.வினர் சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட தேதியில் விஜய் மாநாட்டை நடத்திவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இடைஞ்சல் செய்துவருவதாக அவரது ரசிகர்கள் கொதிக்கிறார்கள். விஜய் ஜாதகப்படி வட தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் […]

சீமானுக்கு தமிழரசன் உடும்புக்கறி..? திருமுருகன் காந்தி தமிழ்த்தேச மோதல்

  ‘’நான் முழுத் தேங்காய்க்கு போராடியவன் தோழர் தமிழரசன் தேங்காய் சில்லுக்காக போராடியவர்’’ என்று சீமான் பேசியிருப்பது தமிழ் உணர்வாளர்க்ளிடம் மிகப்பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.    இது வரை சீமானுக்கும் மே 17 இயக்கம் திருமுருகன் காந்திக்கும் இடையில் உள்ளூர நடந்துகொண்டிருந்த மோதல் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக வெடித்திருக்கிறது. சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் திருமுருகன் காந்தி, ‘’இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்களாக இருந்தபோதிலும், மேதகு பிரபாகரன் தமிழர்களின் தாயகமாக வடக்கு-கிழக்கை இணைத்த தமிழீழத்தையே தமிழ்த்தேசமென அறிவித்து, போர் […]

அப்பாவும், மகனும் போட்டோஷூட்… நாய் ரேஸ்..?  ரேஸ் முடிஞ்சாலும் விரட்டும் எடப்பாடி

தமிழகத்தில் போதை விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில் முதலீடு என்று ஸ்டாலினும் கார் ரேஸ் என்று உதயநிதியும் போட்டோஷூட் நடத்தினால் போதுமா என்று கடும் கண்டனம் எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன. வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் […]