Share via:
கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11-ம் தேதி நடைபெற்ற அனிருத் – காவியா கலாநிதி மாறன் திருமணத்திற்கான வரவேற்பு நேற்றைய
தினம் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த
வரவேற்பு விழாவில் எடுக்கப்பட்ட வித்தியாசமான சந்திப்பு புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஐபிகளின் வருகையில் சென்னையே குலுங்கியது.
துணை
ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு முதல்வர் விஜய், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த், கேரள மாநில முதல்வர் சதீசன், முன்னாள் முதல்வர்கள் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வந்தனர். பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோர்
வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஆகியோர் கவனம் ஈர்த்தனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், கேன் வில்லியம்சன், டேனியல் வெட்டோரி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் வந்தனர்.
அரசியலில் எதிர் துருவங்களாக இருக்கும் முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலினும்,
எடப்பாடி பழனிசாமியும், சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒரே இடத்தில் அமர்ந்து
சிரித்து பேசினார்.
அதேபோல் இன்றைய முதல்வர் விஜய் புதிய கெட்டப்பில் வந்தார். முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ஆகியோர் ஒரே மேடையில்
ஒன்றாக நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல், விஜய் மனைவி சங்கீதாவும், விஜய் அம்மா சோபா சந்திரசேகரும்
இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு த்ரிஷா வரவில்லை என்பதுதான் பலருக்கும்
ஆச்சர்யம்.
நட்சத்திரகலைவிழா போன்று நடந்துமுடிந்திருக்கிறது அனிருத் வரவேற்பு.

