News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் அத்தனை பேருக்கும் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒரு சூப்பர் குட் அறிவிப்பு கொடுத்துள்ளது. அதன்படி, யுபிஎஸ்சி எழுதி பாஸ் செய்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்று சொல்லப்படும் யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் அதாவது 2026 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இந்த ஊக்கத்தொகையை பெற விரும்புகிற நடப்பு ஆண்டில் யுபிஎஸ்சி குடிமைப் பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் இணையதளம் மூலம் வரும் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மட்டும் இல்லை, பிரிலிம்ஸ் தாண்டி மெயின்ஸ் எழுதி பாஸ் பண்ணி, அடுத்து நேர்காணல் என்று சொல்லப்படும் இன்டர்வியூவுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, அந்த பயிற்சி செலவுக்கும், டெல்லி சென்று வருவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும், தங்குவதற்கும் இந்த பணம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

குறிப்பாக ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், இவர்கள் எல்லோரும் பணக்கஷ்டம் காரணமாக யுபிஎஸ்சி கனவை பாதியிலேயே விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஊக்கத்தொகை திட்டம் உருவாக்கப்பட்டது.

எனவே 2026 ஆம் ஆண்டு மெயின்ஸ் தேர்வில் பாஸ் பண்ணிய தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் இந்த மாதம் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த ஐம்பதாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link