News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

‘எக்ஸ்’ பக்கத்தில் இருக்கிறீர்களா? இனி இதெல்லாம் இலவசம் கிடையாதாம்!

இனி எக்ஸ் பயனாளிகளிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகளவில் எக்ஸ் பக்க பயனாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். எக்ஸ் தள பக்கத்தில் கருத்துகள், வீடியோக்கள், போட்டோக்கள் என பதிவேற்றம் செய்வதையும், புரமோஷன்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  மேலும் லைக் செய்வது, கமெண்ட் செய்வது, பாலோ செய்வது என ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ் பக்கத்தை டீபால்டாகவே பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான […]

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! தி.மு.க.வின் அதிரடி நடவடிக்கை!

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டோம் என்றும் பிளஸ்2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.   எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது என்பதால், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தீபாவளி போனஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஒப்புதல் அறிவிப்பின்படி ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் […]

தன்பாலின திருமணம்! உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?

தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.   இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இன்றைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அனைவருமே ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர.   இந்நிலையில் இந்தியாவில் தன் பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா என்பது இனி மத்திய அரசு முடிவு எடுக்க […]

தினந்தோறும் 300- 400 நபர்கள் டெங்குவால் பாதிப்பு! ககன்தீப்சிங் பேடி தகவல்!

தினந்தோறும் 300 முதல் 400 பேர் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்நிலையில் சென்னை பூவிருந்தல்லி அருகே 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (அக்.17) உயிரிழந்த சம்பவம் […]

தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையும் காங்கிரஸ்? இந்தியா கூட்டணியில் இணைகிறதா?

தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸ் தன் வசம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அக்கட்சியை இந்தியா கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளும் நடந்து வருவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை இந்தியா கூட்டணி நிர்வாகிகள் தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கா அனைத்துக் கட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்கும் திட்டத்தின்படி தெலுங்குதேசம் கட்சியை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   […]

எம்.எஸ்.தோனியுடன் விக்னேஷ் சிவன், யோகி பாபு திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் புது கெட்டப்பில் யோகிபாபு சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் திரைப்படமாக ‘எல்.ஜி.எம்.’ திரைப்படத்தை தயாரித்தார். அதன் இசைவெளியீட்டு விழாவில் எம்.எஸ்.தோனியும் நடிகர் யோகிபாபுவும் அடித்த லூட்டி பல நாட்களுக்கு இணையத்தில் வைரலாகி ரசிக்க வைத்தது.   யோகிபாபுவை சி.எஸ்.கே.வில் விளையாட பரிந்துரை செய்வேன் […]

முதலமைச்சர் உயர்நீதிமன்றத்தின் கீழ்வழக்கறிஞர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் […]

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் திரு. சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் திரு.வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை […]

தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், திரு. ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. கமல் கிஷோர், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், மாநில […]