News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வெளியுறவுத்துறை  அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படையினர் கைது செய்த 27 தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும் இதில் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மகளிர் அணி ஒருங்கிணைப்பில், மகளிர் உரிமை மாநாடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.12.2023 அன்று நந்தனம் ஒய்எம்.சி.ஏ. திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் அவர்களின் சிலையினை நியூ பரிசாக வழங்கினார்.   மேலும் மகளிர் உரிமை மாநாட்டில் தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் […]

ம.பி., சத்தீஸ்கர், தெலுங்கானா: முதல்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அரசியல் களம் சூடுபிடித்து தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகின்றனர். மேலும் தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தயார் செய்து படிப்படியாக வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் அதன்படி, மத்திய பிரதேசத்தில் 144, […]

ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.   தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.   அப்போது அவர் […]

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? சோனியா காந்தி ஆலோசனை!

தமிழகத்தின் அடுத்த காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்தநிலையில் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் […]

துணை நிலை ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்! நாராயணசாமி வலியுறுத்தல்!

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.   கடந்த 10ம் தேதி புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சந்திர பிரியங்கா தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். அத்துடன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் பல பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   ராஜினாமா கடிதத்தில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக […]

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை கிடையாது! கனிமொழி எம்.பி. தகவல்!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது புத்தகம் ஒன்றை சோனியா காந்தியின் கைகளில் கொடுத்த முதலமைச்சர் சிறந்த வரவேற்பை அளித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை […]

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த மைதானம்!

இந்தியா- பாகிஸ்தான் போட்டி! அகமதாபாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!   உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 12வது லீக் போட்டி நடைபெற உள்ளது.   உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துவிடும். அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் இந்தியா& பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2 அணிகளும் உலகக்கோப்பை […]

அக்.18ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.   பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.   உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் […]

இதுவரை 447 குழந்தைகள் பலி! ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

காசாவில் இதுவரை 447 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.   இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. காசாவில் தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை […]