அதிகாலையில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிர மக்கள்!

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மகாராஷ்டிர மக்கள் தூக்கத்தை தொலைத்து தெருக்களில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு! தற்காலிக நிறுத்தம்!
உயர்த்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணத்தை தற்காலிக நிறுத்தி வைப்பதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்னர் ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், 50 சதவீதமாக அதாவது ரூ.225 ஆக உயர்த்தப்பட்டது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி இருப்பதால் ஒவ்வொரு மாணவரும் ரூ.2,050 கட்டணமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் டிகிரி பெறுவதற்கான கட்டணம் ஏற்கனவே ரூ.1,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 […]
பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ […]
1.3 லட்சம் ரசிகர்களுக்காக இதை செய்வோம்! பேட் கம்மின்ஸ்!

நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாளை மதியம் 2 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் […]
இன்று கூடிய சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! புதிய தகவல்கள்!

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதிலும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலப்பணியே முக்கியம் என்று உரை நிகழ்த்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு நிறைவேற்றி மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட […]
காங்கிரசில் இணைந்த விஜயசாந்திக்கு முக்கிய பொறுப்பு!

பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மேடக் எம்.பி.யும், அதிரடி நடிகையுமான விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி தீயாக பரவியது. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த விஜயசாந்தி, காங்கிரசில் இணைய உள்ளார் என்ற செய்தியும் கடந்த […]
திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக அரசை கண்டித்து நாளை (நவ.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை கண்டித்து விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையை பா.ஜ.க. […]
சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்! பா.ஜ.க.வின் நிலை என்ன?

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை (நவ.18) கூடும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்த […]
மாரடைப்பால் உயிரிழந்த விமானி! அதிர்ச்சி தகவல்கள்!

பயிற்சி மேற்கொண்டிருந்த 30 வயது விமான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானியாக 30 வயதான ஹிம்மனில் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று (நவ.16) காலை முனையம் 3ல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென்று ஹிம்மனில்குமாருக்கு லேசான நெஞ்சவலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் […]
ம.பி., சத்தீஷ்கரில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் 70 தொகுதிகளுக்கான 2ம்கட்ட வாக்குப்பதிவும் இன்று காலையில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியினர் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். […]

