News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலி! பதற்றத்தில் பஞ்சாப்!

குருத்வாராவை கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலில் சீக்கியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ்காரர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வார் அமைந்துள்ளது. இதனை கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டதால் நிஹாங் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ்காரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   […]

இந்திய கிரிக்கெட் அணிக்கு பலமாக முழு நாடே உள்ளது! சோயிப் அக்தர் பாராட்டு!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையிலும் அந்நாட்டு பிரதமர் மோடி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய சம்பவத்தை பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தன்னை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்த துக்கத்தை தாங்க முடியாத கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். இதில் விராட் […]

திரிணாமுல் கட்சி தொண்டர் சுட்டுக்கொலை! மேற்கு வங்கத்தில் பதற்றம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த வன்முறைகளில் நாட்டுத் துப்பாக்கிளால் சுட்டும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பலியும் ஏற்படுவதால் மேற்குவங்கத்தில் அடிக்கடி பரபரப்பு நிலவுகிறது. […]

முதல்வருக்கு கருப்புக்கொடி! இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை முதல்வர் பினராயி விஜயன் நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் நவகேரள சதஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனது மந்திரிகளுடன் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.   36 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் […]

மத்தியபிரதேசத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

மத்தியபிரதேசத்தில் இன்று ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில் அடர் என்ற தொகுதியில் கிஷுபுராவில் இயங்கிய வாக்குச்சாவடியில் மட்டும் சிலர் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்பதால் கிஷுபுரா வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாகுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று […]

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்! காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு!

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பி.ஆர்.எஸ். கட்சியினர் மற்றும் […]

சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம்! பரபரப்பு தகவல்கள்!

சூட்கேசில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் நசுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பை குர்லா பகுதியை அடுத்த சாந்தி நகர் பகுதியில் நேற்று (நவ.19) மாலை நேரத்தில் சூட்கேஸ் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக கிடந்த அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண் […]

சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் இடைக்கால மனுவை தற்போது சாதாரண ஜாமீனாக மாற்றி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில் கண்பார்வை உள்ளிட்ட உடல்நலக்குறைவால்  தான் […]

வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்! மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூரில் வானில் திடீரென்று சந்தேகத்திற்கிடமான மர்மப் பொருள் பறந்ததால் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.   மணிப்பூரில் நேற்று (நவ.19) பிற்பகல் 2 மணியளவில் பறக்கும் தட்டுகள் திடீரென்று பறந்து கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை 2 ரபேல் ஜெட் விமானங்களை தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது.   போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக்குறைந்த உயரத்திலேயே பறந்து தேடுதல் […]

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி! விராட் கோலிக்கு அனுஷ்கா ஆறுதல்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோல்வியடைந்த நிலையில் துவண்டு போன கணவர் விராட் கோலியை மனைவி அனுஷ்கா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சுப்மன் கில், கேப்டன் […]