News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்! பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார்.   200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற (நவம்பர்) 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஆளும்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.   மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரசும், எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று […]

கிடப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதா! திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக அரசால் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், அதன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை  நாடிய தமிழக அரசு, ஆளுநர் தமிழக […]

அதிவிரைவு ரெயிலில் திடீர் தீவிபத்து! 19 பேர் காயம்!

உத்தரபிரதேசத்தில் டெல்லி – சஹர்சா வைசாலி அதிவிரைவு ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 19 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் எட்டவா அருகே சென்று கொண்டிருந்த டெல்லி – சஹர்சா வைசா அதிவிரைவு ரெயிலின் எஸ்.6 பெட்டியில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் திடீரென்று புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த ரெயில் ரெயில் மெயின்பூரி சந்திப்புக்கு முன்பாக […]

நாளை உருவாகும் புயல்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பதிகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.   இதற்கிடையில் காற்றழுத்த […]

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையும் விஜயசாந்தி! பா.ஜ.க. மீது அதிருப்தி!

தேர்தலில் சீட் கொடுக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகி நாளை காங்கிரசில் இணைய உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற (நவம்பர்) 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தெலுங்கானாவில் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கி அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கிடையில் பா.ஜ.க. தனது 100 வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்ததால் அங்கு தேர்தல் களம் மற்றும் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன.   […]

300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 36 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   ஜம்மு  காஷ்மீர் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கிருந்த 300 அடி பள்ளத்தில் பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்தது.   இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 36 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் […]

விடுதிக்குள் நுழைந்த கார்! பெண் உரிமையாளர் பரிதாப பலி!

பெண்கள் தங்கும் விடுதிக்குள் திடீரென்று கார் நுழைந்து ஏற்பட்ட விபத்தில் விடுதி உரிமையாளர் பலியான சம்பவம் கோவாவில் அரங்கேறியுள்ளது.   கோவா வஹடார் பகுதியில் பெண்கள்  தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 11ம் தேதி இரவு 57 வயதான ரெமிடியா மேரி விடுதி வளாகத்தில் ரிஷப்சன் முன்பு நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். இவர் விடுதியின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது.   அப்போது அங்கு வேகமாக பாய்ந்து வந்த கார், விடுதி உரிமையாளரான ரெடிமியா […]

இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை […]

இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா& நியூசிலாந்து நாளை மோதல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நாளை நடைபெற உள்ள இந்தியா& நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.   13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தன.   […]

அரசு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் […]