News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு!

மிக்ஜாம் புயல் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அனுப்பப்பட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.   வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் வீடுகளுக்கள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.   புதில் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவினர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]

ஓசூரில் எடப்பாடி பழனிசாமியை அடித்து, துவைத்து, தொங்கப்போட்ட ஓபிஎஸ்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது. ’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித் தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார். ஆனால் இப்பொழுது […]

நாடாளுமன்றத்தில் கலர் குண்டு… அமித் ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆவேசம்

  சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தும், பாரத மாதாவுக்கு ஜே போட்டும் கலகக்காரர்கள் புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்து கலர் கலராக புகை குண்டுகள் வீசியிருப்பது நாடு முழுக்கவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளான டிசம்பர் 13ம் தேதியன்று மீண்டும் அதேபோன்று ஒரு நிகழ்வு நடந்திருப்பது, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேலிக்குரியதாக்கியிருக்கிறது. பார்வையாளர் கேலரியில் சாகர் ஷர்மா, மனோரஞ்சன் ஆகிய இருவரும் அவைக்குள் குதித்து கபடி விளையாடியது போன்று ஒவ்வொரு மேஜையாகத் […]

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்! கேரளா உறுதி!

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார்.   சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில், பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வரும் தமிழக பக்தர்கள் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.   அதில் நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதிகளில் பக்தர்கள் போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் […]

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்! அமைச்சர் உதயநிதி ரூ.1.77 கோடி நிதி!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.1.77 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார்.   தமிழக அரசு விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புதிய அறிவிப்புகளையும் தமிழக அரசு […]

வழிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி! முதலமைச்சரை சந்தித்து பேச அழைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது.   அதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவி தன்னிடம் […]

ஆரோவில் 65வது நிர்வாகக்குழு கூட்டம்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

ஆரோவில் அமைப்பின் 65வது நிர்வாகக்குழுக் கூட்டம் ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று (டிச.12) ஆரோவில் அமைப்பின் 65 ஆவது நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் ஆரோவில் நிர்வாக குழுத் தலைவருமான ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் […]

போதைப்பொருள் விழிப்புணர்வு காணொலி பாடல்: காவல்துறை சார்பில் வெளியீடு!

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பாடல் காணொலி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், அவற்றை தடுக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநிலத்தில உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் […]

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி! மத்தியபிரதேசத்தில் சோகம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் அருகே காண்டலா தெவ்ரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்காக 20 அடி ஆழத்தில் ஆழ்துளை ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இது தெரியாமல் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். விளையாட சென்ற மகன் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் […]

கேரளாவில் தீவிரமடையும் கொரோனா பரவல்! பொதுமக்கள் அச்சம்!

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று பரவல் பல லட்ச உயிர்களை பலி கொண்டதோடு கோடிக்கணக்கான மக்களை பாதித்தது. இதைத்தொடர்ந்து கிருமிநாசினி பயன்படுத்துவது, மாஸ்க் அணிவது என பழக்க வழக்கங்களை கடைபிடித்தார்கள் பொதுமக்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பரவல் சிறிய அளவில் குறைந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு திரிபு நிலைகளில் மாற்றமடைந்தது. கொரோனா 2வது மற்றும் 3ம் அலைகள் […]